"தளபதி விஜயின் அரசியல் வருகையால் அவரது படங்கள் குறையுமா?"    தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் சுவாரஸ்யமான பதில் இதோ!

தளபதி விஜயின் அரசியல் வருகை குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் பதில்,producer dhananjeyan about thalapathy vijay political entry | Galatta

இந்திய சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாகவும் திகழும் தளபதி விஜய் அடுத்ததாக முதல்முறை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது திரைப்பயணத்தில் 68வது திரைப்படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிகில் படத்திற்கு பின் தளபதி 68 படத்தை தயாரிக்க, நீண்ட காலமாக ரசிகர்கள் காத்திருந்த தளபதி விஜய் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி தளபதி 68 படத்தில் இணைகிறது. தளபதி 68 திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் அனைத்தும் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகி வருகிறது லியோ திரைப்படம்.

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்ற அனிருத் இசையமைத்துள்ளார். 100% லோகேஷ் படமாக வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இதனிடையே தளபதி விஜய் அரசியல் வருகை குறித்தும் அனைவரும் வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த முன்னணி தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள், “விஜய் சாரின் அடுத்த கட்டம் வேறு மாதிரி இருக்க போகிறது. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஒரு திட்டத்தில் இருக்கிறார்.” என்றார். தொடர்ந்து அவரிடம் “இதனால் தளபதி விஜய் நடிக்கும் படங்களின் அளவு குறைந்து விடுமா?” எனக் கேட்டபோது, "குறையும் என சொல்ல முடியாது ஆனால் அவர் தவிர்ப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. அவர் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு இரண்டு படம் என நடிக்கிறார் அல்லவா அது குறையும்... அவர் அரசியலுக்கு என்னை வந்துவிட்டார் என்றால் ஒரு 200 நாட்களாவது வருடத்திற்கு அவர் அரசியலுக்கு கொடுக்க வேண்டி இருக்கும். அதனால் நீங்கள் நினைக்கிற மாதிரி வருடத்திற்கு இரண்டு படங்கள் அவரால் நடிக்க முடியாது. ஒரு படம் நடிப்பார் மீது நாட்களில் அரசியலில் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதி. எனவே அந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கும் போது அவரால் தொடர்ந்து இரண்டு மூன்று படங்கள் நடிப்பது என்பதோ அதை ஒப்புக் கொள்வதோ கஷ்டம். ஒரு படம் ஏற்றுக்கொள்வார் அதை ஒரு 100 நாட்களுக்குள் நடித்து முடித்து விடுவார். மீண்டும் அடுத்த படத்திற்கு வருவதற்குள் அரசியலில் கவனம் செலுத்துவார். இப்போது இந்த இப்போது ஒரு 1500 மாணவர்கள் வருகிறார்கள் என்றால் ஒரு 15 ஆயிரம் பேர் குடும்பம் வந்திருக்கும். இப்போது அந்த 15,000 பேருடைய வாழ்க்கையில் விஜய் சார் மிக முக்கியமான ஒரு மனிதராக மாறிவிட்டார்.” என பதில் அளித்துள்ளார். அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.