“அஜித் குமாரின் விடாமுயற்சி பட ஷூட்டிங் & ரிலீஸ் திட்டங்கள் இதுதான்”- தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கொடுத்த செம அப்டேட்! வீடியோ உள்ளே

அஜித் குமாரின் விடாமுயற்சி பட ஷூட்டிங் & ரிலீஸ் திட்டங்கள் குறித்த அப்டேட்,Ajith kumar in vidamuyarchi shooting and release plans | Galatta

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் குறித்த திட்டங்கள் பற்றி தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பகிர்ந்து கொண்டார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராக தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்டவர் நடிகர் அஜித் குமார். அந்த வகையில் முன்னதாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தனது திரைப் பயணத்தில் 62 வது திரைப்படமாக அஜித் குமார் நடிக்கும் AK62  திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் AK62 திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவதாகவும் இப்படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்க இருக்கிறார். கடந்த ஜூலை இரண்டாவது வாரத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் படத்தின் ஸ்கிரிப்ட் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் மகிழ் திருமேணி அவர்கள் அதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் இந்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் விடாமுயற்சி திரைப்படம் குறித்து சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசிய போது, “விடாமுயற்சி திரைப்படம் குறித்து ஏதாவது தகவல்கள் உண்டா? எனக் கேட்டபோது, 

“எனக்கு கிடைத்த தகவலின் படி இந்த செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பு கட்டாயமாக தொடங்குகிறது. அதற்கான எல்லா திட்டங்களும் போய்க் கொண்டிருக்கின்றன. ப்ரீ ப்ரோடக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். என்னுடைய நண்பர்கள் லைகா நிறுவனத்தில் இருப்பவர்களிடம் நான் கேட்டபோது, “அவர்கள் சொன்னார்கள், “சார் செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்குகிறோம் இடைவிடாது நான் ஸ்டாப் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்குகிறோம் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி ஜனவரியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட இருக்கிறோம்” என்ற திட்டத்தில் தான் லைகா நிறுவனம் இருக்கிறார்கள். எனவே எந்த தகவலும் வரவில்லை என்ற பேச்சுகள் எல்லாமே அவர்கள் படப்பிடிப்பை தொடங்கியவுடன் நின்றுவிடும். அதன் பிறகு விடாமுயற்சி படம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பதை தான் நாம் பேசிக் கொண்டிருப்போம்” 

என தெரிவித்திருக்கிறார். தனஞ்ஜெயன் அவர்களின் இந்த அப்டேட் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.