“மாமன்னன்” மாரி செல்வராஜை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… சோசியல் மீடியாவை அதிரவிட்ட புகைப்படங்கள் இதோ!

மாமன்னன் மாரி செல்வராஜை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்,Superstar rajinikanth met mari selvaraj and appreciated him for maamannan | Galatta

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்து மக்களின் மனதை வென்றிருக்கும் மாமன்னன் திரைப்படத்தை கண்டு ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். இதுவரை வைகைப்புயல் வடிவேலு அவர்கள் ஏற்று நடிக்காத முழுக்க முழுக்க அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த மாமன்னன் திரைப்படத்தின் முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்தே ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டியது. மறுபுறம் தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகிக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்து மொத்தமாக திரையுலகை விட்டு விலக தீர்மானித்ததால் மாமன்னன் திரைப்படத்தை தனது கடைசி படம் என அறிவித்தது இன்னும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

இப்படியாக தனது முந்தைய படைப்புகளான பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து அடுத்த அதிரடியான அரசியல் படைப்பாக இயக்குனர் மாரி செல்வராஜ் உருவாக்கிய படம் தான் மாமன்னன். நீண்ட காலமாக தான் பேச நினைத்த மிக முக்கியமான சமூக நீதியை மாமன்னனின் வழியாக மிகச் சரியாக மாரி செல்வராஜ் பேசி இருக்கிறார். சமத்துவத்தை வலியுறுத்தும் இந்த படைப்பிற்கு மக்கள் மத்தியிலும் ஆதரவு பெருகி இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்யும் படமாக மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தேனி ஈஸ்வரின் அட்டகாசமான ஒளிப்பதிவில் செல்வா.ஆர்.கே-வின் கனக்கச்சிதமான படத்தொகுப்பில் உருவாக்கி இருக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் இன்னும் பலம் சேர்த்து இருக்கிறார்.

இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தை கண்டு ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “#MAAMANNAN சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.” என பதிவிட்டதோடு, இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இதுகுறித்து இயக்குனர் மாரி செல்வராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும் கர்ணனையும் பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர்ஸடார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு என் இதயத்திலிருந்து நிரம்பி வழியும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவித்திருக்கிறார். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, “சமத்துவம் போற்றும் #மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்து அன்போடு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு #மாமன்னன் திரைப்படக்குழு சார்பில் அன்பும், நன்றியும்.” என்று பதிவிட்டு இருக்கிறார். சோசியல் மீடியாவில் வைரலாகும் ரஜினிகாந்த் மாரி செல்வராஜ் சந்திப்பின் புகைப்படங்கள் இதோ…

 

#MAAMANNAN

சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.

— Rajinikanth (@rajinikanth) July 4, 2023
 

என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும் கர்ணனையும் பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர்ஸடார் @rajinikanth சார் அவர்களுக்கு என் இதயத்திலிருந்து… pic.twitter.com/O2eocTMJwq

— Mari Selvaraj (@mari_selvaraj) July 4, 2023

சமத்துவம் போற்றும் #மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்து அன்போடு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் @rajinikanth சார் அவர்களுக்கு #மாமன்னன் திரைப்படக்குழு சார்பில் அன்பும், நன்றியும்.@mari_selvaraj @RedGiantMovies_ @KeerthyOfficial #Vadivelu @arrahman #FahadhFaasil @thenieswar @editorselvahttps://t.co/NqTjVN4Xjd

— Udhay (@Udhaystalin) July 4, 2023

பண்டிகை வெளியீடாக வரும் விஷால் - SJசூர்யாவின் ஆக்சன் என்டர்டெய்னர் மார்க் ஆண்டனி... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ
சினிமா

பண்டிகை வெளியீடாக வரும் விஷால் - SJசூர்யாவின் ஆக்சன் என்டர்டெய்னர் மார்க் ஆண்டனி... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ

'தலைவா.. நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம்!- மாமன்னன் பட பாடலுக்காக ARரஹ்மானை புகழ்ந்த செல்வராகவன்! விவரம் உள்ளே
சினிமா

'தலைவா.. நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம்!- மாமன்னன் பட பாடலுக்காக ARரஹ்மானை புகழ்ந்த செல்வராகவன்! விவரம் உள்ளே

சினிமா

"நடிகராகும் ஆசை இருக்கிறதா?"- கற்றது தமிழ் அனுபவத்தை கூறி தரமான பதிலளித்த மாரி செல்வராஜ்! வீடியோ உள்ளே