தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில், அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் அநீதி. நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் நடிகை துஷாரா விஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் அநீதி திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

முன்னதாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் ஜீவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்த திரைப்படம் ஜெயில்.  ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், பிரபாகர், யோகி பாபு, ரோபோ சங்கர், பசங்க பாண்டி மற்றும் ரவி மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எஸ்.ராமகிருஷ்ணன், பாக்கியம் சங்கர் மற்றும் பொன் பார்த்திபன் இணைந்து கதை,திரைக்கதை & வசனம் எழுத, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் ரேமண்ட் டெரிக் படத்தொகுப்பு செய்ய, ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் ஜெயில் திரைப்படத்தை க்ரிக்கஸ் சினி க்ரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார்.

கடந்த ஆண்டே நிறைவடைந்த ஜெயில் படத்தின் ரிலீசுக்காக நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியானது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ஜெயில் படத்தை உலகெங்கும் திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.