ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமான சேவைகள் அச்சமயத்தில் முடங்கி இருந்தபோது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல மத்திய அரசிடம் அனுமதி பெற்று தனி விமானம் மூலமாக  சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சில வருடங்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவ்வபோது அமெரிக்காவிற்கு பரிசோதனைக்காக செல்வதும் பரிசோதனைகளை முடித்து விட்டு சிலகாலம் அங்கே தங்கி இருந்து ஓய்வு எடுத்து வருவதும் வழக்கம். அந்த வகையில் தற்போதும் அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மருத்துவ பரிசோதனைகளை முடித்து விட்டு ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் தனது ரசிகர்களை சந்தித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிகைகள் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜாக்கி ஷெராப், ஜெகபதிபாபு உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இப்போது அமெரிக்காவில் ஓய்வெடுத்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.