உணவில்லாமல் இந்த உலகில் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது.சமையல் நாம் அன்றாடம் செய்யும் மிக முக்கிய வேளைகளில் ஒன்று.ஒருவர் வாழ்வதே சாப்பிடுவதற்கு தான்,இந்த பொறப்பு தான் ருசிச்சு சாப்பிட கிடைச்சது என்று பல பொன்மொழிகள் சமையலையும்,உணவையும் பெருமைப்படுத்தும் விதமாக பல இருக்கின்றன.

உணவையும்,சமையலையும் மையப்படுத்தி பல மொழிகளில் பல முன்னணி சேனல்களில் உலகம் முழுவதும் பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தன.குறிப்பாக தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வந்த உணவு சம்மந்தமான நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்து பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

அந்த வகையில் நடிகர் ரோபோ சங்கர் குருஷி இணைந்து தொகுத்துவழங்கும் நிகழ்ச்சி  "பொங்குறோம் திங்கிறோம்"  .முழுக்க முழுக்க நகைச்சுவையோடு இந்த  சமையல் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.இதன் படப்பிடிப்பு   மலேசியாவில் நடைபெறவிருக்கிறது,மலேசியாவில் மலேசிய உணவுகளைப்பற்றியும் இந்த நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தவிருக்கிறார்கள்.

இந்த  'பொங்குறோம் திங்கிறோம்' நிகழ்ச்சிக்கு  கிரேஷ்கருணாஸ் மற்றும்  சமையல் கலை நிபுணர் வினோத்குமார் நடுவர்களாக பணியாற்றுகிறார்கள்.இந்த நிகழ்ச்சியில்  அமுதவாணன், தங்கதுரை, நாஞ்சில் விஜயன், ஷர்மிளா, சம்யுக்தா, ஆகாஷ், பிரியா, உதயா, சில்மிசம்சிவா,  சாய், ரஞ்சித், இந்திரஜாரோபோசங்கர், சாய், போட்டியளர்களாக பங்குபெறுகின்றனர்.நகைச்சுவையோடு , விதவிதமான உணவுவகைகளையும் கண்களுக்கு விருந்தாக்க வருகிறது  'பொங்குறோம் திங்கிறோம்'.