நடிகர் மயில்சாமி திடீரென மாரடைப்பால் காலமானார்! கண்ணீரில் ரசிகர்கள்

நடிகர் மயில்சாமி திடீரென மாரடைப்பால் காலமானார்,actor mayilsamy passed away due to cardiac arrest | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் மயில்சாமி திடீரென மாரடைப்பால் காலமானார். இயக்குனர் K.பாக்கியராஜ் அவர்களின் தாவணிக் கனவுகள் திரைப்படத்தில் கூட்டத்தில் ஒரு நபராக மிகச் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகுக்குள் நுழைந்த நடிகர் மயில்சாமி, உலகநாயகன் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் கமல்ஹாசனின் நண்பர்கள் கதாபாத்திரத்தில் ஒருவராக நடித்து தனக்கே உரித்தான வானியல் வசனங்களை பேசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து கமல்ஹாசனின் வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பணக்காரன், உழைப்பாளி, விஜயகாந்தின் சின்ன கவுண்டர், சத்யராஜின் வால்டர் வெற்றிவேல், பிரபுவின் டூயட், அஜித் குமாரின் ஆசை, தளபதி விஜய் - சூர்யா இணைந்து நடித்த நேருக்கு நேர் ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். குறிப்பாக தில், தூள், உன்னை நினைத்து, விசில், கில்லி, லண்டன், திமிரு, தில்லாலங்கடி, கந்தசாமி ஆகிய திரைப்படங்களில் தனது நகைச்சுவையான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் மயில்சாமி.

சாதாரண நடிகராக மட்டுமல்லாமல் மாபெரும் மனிதனாக மனதார பல தான தர்மங்களை செய்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மயில்சாமியின் இந்த திடீர் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் சம்பாதிக்கும் பணம் மிக குறைவாக இருந்தாலும் அது முழுவதும் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் கொடுக்கும் மனப்பாங்கு கொண்ட மயில்சாமி கையில் பணம் இல்லாத சமயத்தில் வேறு ஒருவரிடம் வாங்கியாவது உதவி செய்யும் மனம் கொண்டவர். தொடர்ந்து பல்வேறு சமூக நல விஷயங்களில் ஈடுபட்டு வந்த மயில்சாமி பசுமையை காக்க வேண்டும் மரங்களை வெட்டாதீர்கள் என்றும் பல்வேறு சமூக நல புரட்சிகளை செய்துள்ளார்.

நடிகர் மயில்சாமி மாபெரும் சிவ பக்தர். எப்போதும் சிவனடியார்களுக்கு சமமாக பக்தியின் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த மயில்சாமி நேற்று மகா சிவராத்திரியில் சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாடுகளை தொடர்ந்து செய்துள்ளார். அப்போது மகா சிவராத்திரி விழாவில் மயில்சாமி அவர்களோடு பிரபல டிரம்ஸ் கலைஞர் டிரம்ஸ் சிவமணி அவர்களும் உடன் இருந்துள்ளார். சிவராத்திரி முடித்து விடியற்காலைப் பொழுது ட்ரம்ஸ் சிவமணி வீடு திரும்பிய கொஞ்ச நேரத்தில் மயில்சாமி அவர்களின் மறைவு செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்ததாக ட்ரம்ஸ் சிவமணி அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், "என்னால் இந்த விஷயத்தை நம்பவே முடியவில்லை கொஞ்ச நேரம் முன்பு தான் இந்த மனிதன் எனது அன்பு நண்பன் மயில்சாமி என்னோடு சிவராத்திரியை உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது , இனிமேல் அவரை நான் பார்க்கவே முடியாது. நான் உணர்ச்சியற்று இருக்கிறேன். ஒருவேளை கடவுள் உங்களுக்காக வேறு சில திட்டங்களை வைத்திருப்பார்" தெரிவித்துள்ளார்.

திடீரென நம்மை விட்டு பிரிந்த நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு பல கோடி ரசிகர்களும் திரை உலகமும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன், “நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கு என் அஞ்சலி!” என நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் புரட்சி திலகம் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகரான நடிகர் மயில்சாமி அவர்கள் எம் ஜி ஆர்-ஐ போலவே உதவி என கேட்ட அனைவருக்கும் உதவி செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல நடிகனாகவும் மகத்தான மனிதனாகவும் திகழ்ந்த நடிகர் மயில்சாமி அவர்களின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
 

சினிமா

"வாரிசு வெற்றிக்கு தளபதி விஜய் கொடுத்த முத்தம்!"- ட்ரெண்டாகும் பாடலாசிரியர் விவேக் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

கையெழுத்து இயக்கத்தில் இணைந்த விஜய் சேதுபதி-மாரி செல்வராஜ்-ஐஸ்வர்யா ராஜேஷ்... போதையற்ற தமிழ்நாடு உருவாக்க ஒன்றிணையும் நட்சத்திரங்கள்!
சினிமா

கையெழுத்து இயக்கத்தில் இணைந்த விஜய் சேதுபதி-மாரி செல்வராஜ்-ஐஸ்வர்யா ராஜேஷ்... போதையற்ற தமிழ்நாடு உருவாக்க ஒன்றிணையும் நட்சத்திரங்கள்!

நீண்ட காலமாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஸ்வீட் கொடுக்கும் ARரஹ்மான்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் பட ஸ்பெஷல் ட்ரீட்! விவரம் உள்ளே
சினிமா

நீண்ட காலமாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஸ்வீட் கொடுக்கும் ARரஹ்மான்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் பட ஸ்பெஷல் ட்ரீட்! விவரம் உள்ளே