ஐபிஎல் கிரிக்கெட் நேற்று நடைபெற்ற 60வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி  பெற்றது.

ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.நேற்று  நடைபெற்ற  60வது லீக் போட்டியில் பெங்களூரு  - பஞ்சாப்  அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி  பெற்றது.இந்த வெற்றியால் பஞ்சாப் புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது .

ராஜஸ்தான் அணி 12 போட்டியில் 7 வெற்றியும். பெங்களூரு அணி 13 போட்டியில் 7 வெற்றி, டெல்லி, பஞ்சாப்,அணிகள் 12 போட்டியில் ,6  வெற்றியும்,ஹைதராபாத் ,கொல்கத்தா அணி 5 வெற்றியும் பெற்று.பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தீவிரம் காட்டுவதால் இனி வரும் போட்டிகள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

அதனைத்தொடர்ந்து இந்த சீசனில் ஆர்சிபி அணியில் அதிக ரன்கள் சேர்த்த வகையில் தினேஷ் கார்த்திக் 2-வது இடத்தில் இருக்கிறார். 13 போட்டிகளில் 285 ரன்கள் குவித்துள்ள தினேஷ் கார்த்திஸ், சராசரி 57ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 192 ஆகவும் இருக்கிறது. 

சிறந்த பினிஷராக, விக்கெட் கீப்பராகவலம் வரும் தினேஷ் கார்த்திக்கை டி20 உலகக் கோப்பைக்கு இ்ந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் டி20போட்டியில் சிறந்த ஃபினிஷர் சிஎஸ்கே கேப்டன் தோனி என்று பேசப்பட்டு வரும் நிலையில் சிறந்த பினிஷர் தினேஷ் கார்த்திக் தான் என்று தோனியையும் ஹர்பஜன்சிங் மறைமுகமாக குத்திக்காட்டியுள்ளார்.

எதிர்காலம் பற்றிநான் ஆழமாகப் பேசுகிறேன். மீண்டும் சொல்கிறேன். இந்த ஐபிஎல் சீசன் தினேஷ் கார்த்திக்கிற்கு அற்புதமாக இருக்கிறது. அவரை ஆர்சிபி அணியில் முன்வரிசையில் களமிறக்கினால் நன்றாக இருக்கும். 15 முதல் 16 ஓவரில் அவரை களமிறக்கினாலே போதும் ஆட்டத்தை ஃபினிஷ் செய்து விடுவார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய ஆட்டம் கொல்கத்தா அணிக்கு வாழ்வா-சாவா போராட்டமாகும். கொல்கத்தா அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்திய உத்வேகத்துடன் களம் இறங்குகிறது. தசைப்பிடிப்பு காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்செல், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங்கும், பந்து வீச்சில் உமேஷ் யாதவ், ஆந்த்ரே ரஸ்செல், டிம் சவுதி, சுனில் நரின், வருண் சக்ரவர்த்தியும் வலுசேர்க்கிறார்கள்.

அதனைத்தொடர்ந்து கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும். முதல் 2 லீக் ஆட்டங்களில் தோல்வியும் அடுத்த 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியும் பெற்ற அந்த அணி தனது முந்தைய 4 ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து நெருக்கடியில் உள்ளது. சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ஆகியோர் கடந்த சில ஆட்டங்களில் ஆட முடியாமல் போனதும், அதிவேகமாக பந்து வீசும் உம்ரான் மாலிக் பந்து வீச்சு எதிர்பார்த்தபடி எடுபடாததும் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 

மேலும் காயத்தால் கடந்த 2 ஆட்டங்களை தவற விட்ட நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இந்த ஆட்டத்தில் களம் திரும்புவார்கள் என்று அந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐதராபாத் அணியின் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, மார்க்ராம், ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கில் இன்னும் நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் நடராஜன், உம்ரான் மாலிக், புவனேஷ்வர்குமார் ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள்.

தொடர்ந்து கொல்கத்தாவுக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தை எதிர்கொள்ளும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க கொல்கத்தா அணி போராடும். அடுத்த சுற்று வாய்ப்பை நிர்ணயிக்கும் போராட்ட களமாக இருக்கும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது எனலாம்.