இந்திய சினிமாவின் தலைசிறந்த படத்தொகுப்பாளர்களில் ஒருவராக 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு படத்தொகுப்பு செய்து முன்னணி படத்தொகுப்பாளராக திகழும் ஸ்ரீகர் பிரசாத் அவர்கள் படத்தொகுப்பில் அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அதிலும் குறிப்பாக பிரம்மாண்ட படைப்பாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ஸ்ரீகர் பிரசாத் அவர்களின் படத்தொகுப்பில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் சிறப்பு பேட்டி அளித்த படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் அவர்கள் நம்மோடு பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், இதுவரை 600 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு படத்தொகுப்பு செய்திருக்கிறீர்கள்... அதில் நிறைய திரைப்படங்களில் நீக்கப்பட்ட காட்சிகள் இருந்திருக்கும். இப்போது சில படங்களை குறிப்பிடுகிறோம் அந்த படங்களில் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து ஓரிரு வார்த்தைகள் எங்களுக்காக? எனக் கேட்டபோது,
“இப்போது நீக்கப்பட்ட காட்சிகள் என்பது ஒரு மார்க்கெட்டிங் தான் சோசியல் மீடியாவில் எந்த காட்சி நீக்கப்பட்டது என்பது தெரிந்து கொள்வதற்காக, இது கொஞ்சம் சுவாரஸ்யமானது தான். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறோம். அந்தக் காட்சி கட்டாயமாக திரைப்படத்திற்குள் இருக்கக் கூடாது. அந்த காட்சி அந்த படத்தில் இருப்பதனால் அந்த படத்திற்கு பிரயோஜனம் இல்லை. கதையின் போக்கிற்கு இடிக்கிறது. எல்லா நேரங்களிலும் நீளம் மட்டும் காரணமல்ல... நீளம் அதிகமானதால் தான் நீக்கப்பட்டது என்பது ஒரு கான்செப்ட்டாக இருக்கிறது. நீளம் அதிகமாக இருப்பதற்காக எந்த காட்சியும் நீக்கப்படுவது கிடையாது காட்சியாக அது நல்ல சீனாக தான் இருக்கும். நீங்கள் தனித்து பார்க்கும் போது "ஐயோ நன்றாக இருக்கிறது இந்த சீன் இதை படத்தில் வைத்திருக்கலாமே?" என்று தோன்றும். ஆனால் நீங்கள் இதை எப்படி கற்பனை செய்து பார்க்க வேண்டும் என்றால் அது படத்தில் எந்த இடத்தில் வருகிறது அங்கே அது எப்படி இருக்கும் என்று தான் பார்க்க வேண்டும்.”
என தெரிவித்த ஸ்ரீதர் பிரசாத் அவர்கள் தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தில் இடம் பெற்ற ராட்சசி மாமனே பாடலில் படத்தில் இடம்பெறாத காட்சிகள் வீடியோ பாடலில் இடம் பெற்றது குறித்து விவரித்து கூறினார். தொடர்ந்து அவரிடம்,
“RRR படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து கேட்டபோது, RRR படத்திலும் ஒரு குறிப்பிட்ட காட்சியை படம் பிடித்து விட்டு தூக்கி போட்டு விட்டோம் என்பது போல் கிடையாது. ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் அந்த காட்சியை படமாக்கி இருப்பார்கள் ஆனால் அந்த கண்ணோட்டத்தில் அந்த காட்சி சரியாக அமையவில்லை என்றால் அதன் ஒரு பகுதியை மீண்டும் படமாக்கி விட்டோ அல்லது அதை நீக்கி விட்டோ வேறு மாதிரி வைப்போம். மொத்தமாக நீக்கப்பட்ட ஒரு காட்சி என்பது போல் எல்லாம் எதுவும் இல்லை…”
என ஸ்ரீகர் பிரசாத் பதில் அளித்துள்ளார். மேலும் சுவாரசியமாக பேசிய ஸ்ரீகர் பிரசாத் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…