பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் ராக்கி பாய்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. - வைரலாகும் அட்டகாசமான அப்டேட் இதோ..

தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் கேஜிஎப் யாஷ் விவரம் இதோ - KGF rocky yash Next film with director Geethu mohandas | Galatta

பிரபல கன்னட நடிகர் யாஷ் கடந்த 2018 ம் ஆண்டு வெளியான ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் பான் இந்திய நடிகராக உயர்ந்து அவரது மார்கெட் தரம் வேறு தளத்திற்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து பேக் டூ பேக் என்றபடி கடந்த 2022 ம் ஆண்டு வெளியான ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம் மிகபெரிய வசூல் சாதனையை படைத்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் உலகளவில் மிகப்பெரிய கவனம் பெற்றது. மேலும் இப்படத்தில் ராக்கி பாய் ஆக நடித்த நடிகர் யாஷ் அவருக்கு நாடு முழுவதும் அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். மிகபெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தும் கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் முடிந்த நிலையிலும் அவருடைய அடுத்த படம் குறித்த எந்தவொரு அப்டேட்டும் வெளிவராமல் இருந்தது.

இதனிடையே கேஜிஎஃப் படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே கேஜிஎஃப் 3 ம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் கேஜிஎஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் கூட்டணியில் ‘சலார்’ படத்தில் பிஸியாக பணியாற்றி வருகிறார். அதை முடித்து ஜூனியர் என்டி ஆர் உடன் கூட்டணி அமைக்கும் ‘என்டிஆர் 31’ படத்தை இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களுக்கு பின்பு தான் கேஜிஎஃப் 3 திரைப்படம் உருவாக வாய்ப்பு உள்ளது. இதனிடையே நடிகர் யாஷ் எந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்கவுள்ளார் என்று ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்பார்த்து நிற்க்கும் நிலையில், தென்னிந்திய படங்களில் நடிகையாக இருந்து இயக்குனராக மாறியா கீது மோகன் தாஸ் அவர்கள் இயக்கவிருக்கும் புதிய படத்தில் யாஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் மாதவன் நடித்து வெளியான நல தமயந்தி திரைப்படம் மூலம் தமிழில் பிரபலமான கீது மோகன் தாஸ் பின் கே பாலசந்தர் இயக்கத்தில் ‘பொய்’ திரைப்படத்தில் நடித்து கவனம் பெற்றார். இதுமட்டுமல்லாமல் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார் நடிகை கீது மோகன்தாஸ்.

நடிகையாக இருந்த கீது மோகன்தாஸ் பின் 2014 இந்தியில் ‘லையர்ஸ் டைஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. பின் 2019 மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவான ‘மூத்தோன்’  திரைபடத்தை இயக்கி தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் இயக்குனர் கீது மோகன்தாஸ். இந்த திரைப்படம் பல உலக நாடுகளின் விருது மேடைகளை அலங்கரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரது அடுத்த திரைப்படத்தில் கேஜிஎஃப் ஹீரோ யாஷ் நடிக்கவுள்ளதாக தகவல் இணையத்தில் வைரலாகி வந்தது

இந்த தகவலை பிரபல நடிகை ரீமா கலிங்கல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதனுடன் ‘ma babeeeeee here people’ என்று அதனுடன் இயக்குனர் கீது மோகன்தாஸ் அவர்களை டேக் செய்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் அவரது பதிவினை பகிர்ந்து வருகின்றனர்.  இருந்தாலும் படக்குழு தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

விரைவில் இயக்குனர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ –  அப்டேட்டுடன் வெளியான அட்டகாசமான வீடியோ இதோ..
சினிமா

விரைவில் இயக்குனர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ – அப்டேட்டுடன் வெளியான அட்டகாசமான வீடியோ இதோ..

இந்தியில் ரீமேக்காகும் பரியேரும் பெருமாள்?.. கரண் ஜோஹரை விளாசும் ரசிகர்கள்  - இணையத்தில் வைரலாகும் தகவல்..  விவரம் உள்ளே.
சினிமா

இந்தியில் ரீமேக்காகும் பரியேரும் பெருமாள்?.. கரண் ஜோஹரை விளாசும் ரசிகர்கள் - இணையத்தில் வைரலாகும் தகவல்.. விவரம் உள்ளே.

சினிமா

"தளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் இப்படி வந்திருக்க வேண்டியது" படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் பகிர்ந்த தகவல் - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..