ரஜினி - விஜய் படங்களுக்கு படத்தொகுப்பு செய்வதில் இருக்கும் சுவாரசியங்களை பகிர்ந்த ஸ்ரீகர் பிரசாத்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

ரஜினி - விஜய் படங்களுக்கு படத்தொகுப்பு செய்வது பற்றி பேசிய ஸ்ரீகர் பிரசாத்,sreekar prasad about editing experience of rajini vijay movie | Galatta

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த படத்தொகுப்பாளர்களில் ஒருவராக திகழும் ஃபிகர் பிரசாத் அவர்கள், படத்தொகுப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டில் SS.ராஜமௌலியின் RRR, மம்மூட்டியின் CBI5, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் மாமனிதன் உள்ளிட்ட பல படங்கள் வெளிவந்து மக்களை மகிழ்வித்தன. தொடர்ந்து இந்த ஆண்டில் பொன்னியின் செல்வன்-2, இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் பிரத்தியேக பேட்டி கொடுத்த படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் அவர்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் இந்த ஹீரோவுக்கு இவ்வளவு மீட்டர் வேண்டும் இந்த ஹீரோவுக்கு இவ்வளவு ஸ்கிரீன் ப்ரெசசன்ஸ் வேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் ஒன்று வைப்பார்கள் அல்லவா? உதாரணத்திற்கு செக்கச் சிவந்த வானம் படத்தைக் கூட சொல்லலாம் அதை எப்படி நீங்கள் திருப்தி படுத்துகிறீர்கள்..? எனக் கேட்டபோது, 

“இது என்னவென்றால் ஓரளவிற்கு என்ன நடக்கிறது தியேட்டர்களில் என்பது தெரிய வேண்டும். அதற்கு படம் பார்க்க வேண்டும். திரையரங்குகளில் அவர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் எந்த இடத்தில் யாரை ரசிக்கிறார்கள் என்பதெல்லாம் ஓரளவிற்கு நாம் தெரிந்திருக்க வேண்டும். இந்தத் துறையில் நீங்கள் தொழில்நுட்ப கலைஞராக இருக்கும் போது எந்த மாதிரியான சினிமா பண்ணுகிறீர்களோ அதற்கு தகுந்தார் போல், நீங்கள் பார்வையாளராகவும் இருக்க வேண்டும். அதுதான் உங்களுக்கு ஒரு தெளிவான ஐடியாவை கொடுக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு என்ன இருந்தது… இன்று என்ன இருக்கிறது… என்பது நீங்கள் வளர்வதற்கு உதவும். இது இல்லாமல் ஒரு பெரிய ஹீரோ இருக்கிறார்கள் என்றால் சில விஷயங்கள் பண்ணும் போது ரசிகர்கள் அதை உற்சாகமாக பார்க்க விரும்புவார்கள். நான் இளமையில் இருக்கும் போது ரஜினி படங்கள் பார்க்கிறேன். அவர் ஏதாவது செய்தால் நாங்கள் கொண்டாடுகிறோம். அதேபோல் தற்போது விஜய் அல்லது யாராவது செய்யும் போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் உதாரணத்திற்கு அவர் ஒரு சண்டைக்காட்சியில் நடிக்கிறார். ஒரு சிங்கிள் ஷாட்டில் அதை செய்கிறார் என்றால் அதை அப்படியே நிறுத்தி காட்டும்போது இன்னும் த்ரில்லாக இருக்கும். இவரே செய்தார் என்பது போல இருக்கும். இது மாதிரியான விஷயங்கள் பெரிய நட்சத்திரம் நடிகர்களுக்கான படங்களில் பணியாற்றும் போது இருக்கும். இப்போது ரியலிஸ்டிக்கான சினிமாக்களை சின்ன நடிகர்களை வைத்து செய்யும் போது சில விஷயங்களை மிகவும் பெரிதுபடுத்தி காட்டக்கூடாது. இதே பெரிய நட்சத்திரங்கள் செய்யும்போது அதை பெரிதுபடுத்தி ரசிகர்களின் உற்சாகம் எப்படி இருக்கும் என்பதை கணித்து நாம் பணியாற்ற வேண்டும்.” என ஸ்ரீகர் பிரசாத் அவர்கள் தெரிவித்துள்ளார் ஸ்ரீதர் பிரசாத் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…
 

தாயார் ஷோபா சந்திரசேகர் உடன் தளபதி விஜய்... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் அசத்தலான புதிய புகைப்படம் இதோ!
சினிமா

தாயார் ஷோபா சந்திரசேகர் உடன் தளபதி விஜய்... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் அசத்தலான புதிய புகைப்படம் இதோ!

'இது போதும் இனி நாங்க பாத்துக்கிறோம்!'- நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் உற்சாகத்தில் ரக்ஷிதா... காரணம் என்ன? விவரம் இதோ!
சினிமா

'இது போதும் இனி நாங்க பாத்துக்கிறோம்!'- நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் உற்சாகத்தில் ரக்ஷிதா... காரணம் என்ன? விவரம் இதோ!

அந்த இசையின் சத்தங்கள் நம்ப முடியாதவை!- ரோஜா படத்திற்கு முன் ARரஹ்மான் உடனான முதல் சந்திப்பு குறித்து பேசிய மணிரத்னம்! வைரல் வீடியோ
சினிமா

அந்த இசையின் சத்தங்கள் நம்ப முடியாதவை!- ரோஜா படத்திற்கு முன் ARரஹ்மான் உடனான முதல் சந்திப்பு குறித்து பேசிய மணிரத்னம்! வைரல் வீடியோ