கன்னடத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் புனீத் ராஜ்குமார்.பவர்ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி ரசிகர்களிடம் அன்பாக நடந்து கொள்வது,சமூக அக்கறை கொண்ட செயல்களை செய்வது என்று பல துறைகளில் தன்னால் முடிந்த உதவியை செய்து வந்தார்.

46 வயதான இவர் அக்டோபர் 29ஆம் தேதி இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களில் புனீத் உயிரிழந்தார்.புனீத்தின் திடீர் மறைவு கன்னட சினிமாதுறையினர் மட்டுமின்றி இந்தியா சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.புனீத்தின் திடீர் மறைவு ரசிகர்களை பெரும் வருத்தத்தில் உள்ளாக்கியுள்ளது.

எப்போதும் முகத்தில் சிரிப்போடு இருக்கும் இவர் மிகவிரைவில் பிரிந்துவிட்டார் என்று ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.தமிழ் சினிமாவை சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை பதிவிட்டு வருகின்றனர்.தற்போது தல அஜித் புனீத்  ராஜ்குமாரின் திடீர் மறைவு மிகவும் வருத்தமளிப்பதாக ஒரு அறிக்கையை தனது மனைவி ஷாலினியுடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.

இதேபோல இவரது மறைவு இந்தியா சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு என தென்னிந்தியாவின் முக்கிய பிரபலங்களான தனுஷ்,சிவகார்த்திகேயன்,கீர்த்தி சுரேஷ்,மகேஷ் பாபு,முதல்வர் ஸ்டாலின்,பிரதமர் மோடி என பலரும் தங்கள் வருத்தத்தினை தெரிவித்து வருகின்றனர்.இவரது உடல் நாளை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.