விஸ்வரூப வேகத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு.. Stylish Look ல் கமல் ஹாசன் - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் பதிவு இதோ..

இந்தியன் 2 படப்பிடிப்பு காட்சிகளை முடித்தபின் கமல் ஹாசன் - Kamal Haasan new picture from indian 2 picture | Galatta

இந்திய சினிமாவே பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படம் என்றால் அது உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் பாகம் 2’. ஏகப்பட்ட காரணம் இருந்தாலும் நினைத்து பார்க்க முடியாத அளவு 27 ஆண்டுக்கு பின் எடுக்கப்படவிருக்கும் பாகம் 2 திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு தனி எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த சில ஆனடுகளாக பல தடைகளை தாண்டி படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கமல் ஹாசன் அவர்களின் முந்தைய திரைப்படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றதால் வர்த்தக ரீதியான மார்கெட்டும் ரசிகர் வட்டமும் விரிவடைந்துள்ளது. 1996 ல் வெளியான இந்தியன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 பாகம்  படம் உருவாகுவதாலும் கமல் வயாதான தோற்றத்தில் ஆக்ஷனில் மீண்டும் 26 ஆண்டு கழித்து வருவதாலும் இந்த படத்திற்கு தனி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளனர்.

சுபாஸ்கரன் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்திற்கான வேலைகளில் இயக்குனர் சங்கர் தீவிரமாக இறங்க, கமல் அவருடைய நடிப்பு பிரிவுகளை தனித்தனியாக முடித்து கொடுத்து வருகிறார். மேலும் சில காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கபடவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நாட்களுக்கு முன் திருப்பதி வனப்பகுதி அருகே நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்புக்கு கமல் பிரத்யேக ஹெலிகாப்டரில் சென்றிருந்தார். தற்போது அவர் அங்கு எடுக்கப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஹெலிகாப்டரில் திரும்பியுள்ளார் கமல் ஹாசன். இதுகுறித்து வெளியான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

thalapathy vijay varisu movie team released beautiful soul of varisu video song

 

View this post on Instagram

A post shared by Amritharam (@amritha.ram)

80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிகட்டத்தை நோக்கி இந்தியன் 2 படப்பிடிப்பு குழு நகர்ந்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ள இந்தியன் 2 திரைப்படம் இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்தப் படத்தில் உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.   

“அப்டேட் கேக்காம இருக்க நீங்க இப்படி பண்ணிருக்கிங்க”.. லியோ பட தயாரிப்பாளரிடம் பிரபல இயக்குனர்.. – உற்சாகத்தில் இயக்குனர் பகிர்ந்த பதிவு வைரல்..
சினிமா

“அப்டேட் கேக்காம இருக்க நீங்க இப்படி பண்ணிருக்கிங்க”.. லியோ பட தயாரிப்பாளரிடம் பிரபல இயக்குனர்.. – உற்சாகத்தில் இயக்குனர் பகிர்ந்த பதிவு வைரல்..

“பள்ளி கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும்”.. ரசிகர் கேள்விக்கு வெற்றிமாறனின் சுவாரஸ்யமான வைரல் பதில் இதோ..
சினிமா

“பள்ளி கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும்”.. ரசிகர் கேள்விக்கு வெற்றிமாறனின் சுவாரஸ்யமான வைரல் பதில் இதோ..

தளபதி ரசிகர்களுக்கு Double Treat கொடுத்த ‘லியோ’ படக்குழு.. ரசிகர்கள் கொண்டாட்டம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..
சினிமா

தளபதி ரசிகர்களுக்கு Double Treat கொடுத்த ‘லியோ’ படக்குழு.. ரசிகர்கள் கொண்டாட்டம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..