EQUALIZER 3 பட திரையிடலில் தளபதி விஜயின் FANBOY MOMENT... தளபதி 68 இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்த அட்டகாசமான GLIMPSE இதோ!

தளபதி விஜயின் FANBOY மொமெண்ட்டை பகிர்ந்த இயக்குனர் வெங்கட் பிரபு,thalapathy 68 director venkat prabhu shared vijay fanboy moment  | Galatta

லாஸ் ஏஞ்சல்சில் EQUALIZER 3 திரைப்படத்தின் திரையிடலில் ஃபேன் பாயாக மாறிய தளபதி விஜயின் புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களின் ஒருவராக தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்டிருக்கும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆக்சன் கிங் அர்ஜுன் த்ரிஷா மன்சூர் அலிகான் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனர் மிஷ்கின் என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே தளபதி விஜய் உடன் இணைந்து நடித்துள்ளனர். எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிற  லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

லியோ திரைப்படத்தை தொடர்ந்து திரை பயணத்தில் 68 வது படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் அடுத்ததாக தளபதி விஜய் நடிக்க இருக்கிறார் . கடந்த சில வாரங்களுக்கு முன்பு லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த தளபதி விஜய் சிறு இடைவெளி எடுத்துக் கொண்டு தற்போது தளபதி 68 திரைப்படத்தில் தற்போது கவனம் செலுத்தியிருக்கிறார். முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தை ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற பிகில் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்தபடியே தளபதி விஜயின் தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். தற்போது தளபதி 68 திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன. உலகின் முன்னணி VFX நிறுவனங்களில் ஒன்றாக ஆஸ்கார் விருதுகளை வென்ற USC ICT நிறுவனத்துடன் தளபதி 68 படக்குழு கைகோர்த்துள்ளது. லைட் ஸ்டேஜ் என்ற முறையில் மேம்பட்ட மோஷன் கேப்சர் செய்யக்கூடிய உயர்தர VFX பணிகளுக்காக தளபதி 68 படக்குழு தற்போது USC ICT நிறுவனத்துடன் இணைந்துள்ளது. 

லாஸ் ஏஞ்சல்ஸில்  நடைபெற்று வரும் தளபதி 68 திரைப்படத்தின் இந்த முதற்கட்ட பணியில் தளபதி விஜய் ஈடுபட்டிருக்கும் புகைப்படத்தை தனது விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு, "எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்!!! #தளபதி68" என குறிப்பிட்டு நேற்று செப்டம்பர் 1ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் உலக அளவில் பல கோடி ரசிகர்களும் ஆவலோடு காத்திருந்த ஹாலிவுட் திரைப்படமான சினிமாவில் நட்சத்திர நடிகர் நடித்த டென்செல் வாஷிங்டன் கதாநாயகனாக நடித்த அதிரடி ஆக்சன் படமான EQUALIZER 3 திரைப்படத்தின் முதல் நாள் காட்சியை தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இருவரும் திரையரங்கில் கண்டு ரசித்துள்ளனர். அப்போது நடிகர் டென்செல் வாஷிங்டன் FANBOY-யாக தளபதி விஜய் ஸ்கிரீனை பார்த்தபடி நிற்கும் புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த ட்ரெண்டிங் புகைப்படம் இதோ... 
 

For the first ever time!!! I captured our #Thalapathy @actorvijay na’s fan boy moment!!! #denzelwashington #Equalizer3 #fdfs #LA #Thalapathy68 @archanakalpathi pic.twitter.com/lbZhamkEXM

— venkat prabhu (@vp_offl) September 2, 2023