ரசிகர்கள் எதிர்பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் ஜெயிலர் பட OTT ரிலீஸ் எப்போது?- அதிரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட OTT ரிலீஸ் அறிவிப்பு,super star rajinikanth in jailer movie ott release announcement | Galatta

உலக அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் தயாராக இருக்கின்றன. அந்த வகையில் தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தயாரிப்பில் ஜெய் பீம் படத்தில் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைய இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே முதல் முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பக்கா ஆக்சன் என்டர்டைனர் படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸாகியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அத்தனை சிறப்பம்சங்களும் நிறைந்த அட்டகாசமான ஆக்சன் ட்ரீட்டாக ஜெயிலர் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் கொடுத்திருந்தார். 

ரிலீசான முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டையை தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் முதல் வார முடிவில் 375.40 கோடி ரூபாய் வசூலித்து தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்தது தொடர்ந்து இரண்டாவது வார இறுதியில் 525 கோடிக்கு மேல் வசூலித்து இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறியது. இந்த ஹிமாலய வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு காசோலை வழங்கிய கலாநிதி மாறன் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 ரக கார் ஐ பரிசாக வழங்கினார் அதேபோல் இயக்குனர் நெல்சன் அவர்களுக்கும் காசோலை வழங்கிய தயாரிப்பாளர் கலாநிதி மாறன் PORSCHE கார் ஒன்றை பரிசாக வழங்கினார். திரையரங்குகளில் ரிப்பீட் மோட்டில் கொண்டாடப்பட்டு வரும் ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஜெயிலர் படம் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

Jailer's in town, it's time to activate vigilant mode! 🔒🚨#JailerOnPrime, Sept 7 pic.twitter.com/2zwoYR6MqV

— prime video IN (@PrimeVideoIN) September 2, 2023