மான்ஸ்டர் வெற்றி கூட்டணி SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் அடுத்த படைப்பு... கவனிக்க வைக்கும் பொம்மை பட ட்ரெய்லர் இதோ!

SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் பொம்மை பட ட்ரெய்லர் வெளியீடு,Sj suryah priya bhavani shankar radha mohan bommai movie new trailer | Galatta

தனக்கென தனி பாணியில் இயக்குனராக முத்திரை பதித்து பின்னர் நடிகராகவும் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் இயக்குனர் SJ.சூர்யா அவர்கள் மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நடிகை பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து நடித்த பொம்மை திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியானது. முன்னதாக அஜித் குமாரின் வாலி, தளபதி விஜயின் குஷி என தனது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து நியூ திரைப்படத்தில் கதாநாயகனாகவும் களமிறங்கினார் SJ.சூர்யா. நியூ , அன்பே ஆருயிரே மற்றும் இசை ஆகிய படங்களை இயக்கி நடித்த SJ.சூர்யா, தொடர்ந்து நடிகராக ஹீரோ - வில்லன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் மிகச் சிறப்பாக நடித்து வருகிறார். 

அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஸ்பைடர், தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்து வெளிவந்த மாநாடு, சிவகார்த்திகேயனின் டான் என படத்திற்கு படம் சவாலான பலவிதமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் SJ.சூர்யா,
அடுத்ததாக விஷாலுடன் இணைந்து வித்தியாசமான டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக தயாராகி இருக்கும் மார்க் ஆண்டனி, பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க உருவாகி வரும் கேம் சேஞ்சர் ஆகிய திரைப்படங்களில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

தொடர்ந்து இறைவி படத்திற்கு பின் மீண்டும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்த SJ.சூர்யா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இந்த தீபாவளி வெளியிட ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் SJ.சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் தான் பொம்மை. தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மொழி மற்றும் அபியும் நானும் உட்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் SJ.சூர்யா & பிரியா பவானி சங்கர் இருவரும் மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பொம்மை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். 

ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், அண்தோனி படத்தொகுப்பு செய்துள்ள பொம்மை திரைப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர் கார்க்கி எழுதியுள்ளார். டாக்டர் V.மருது பாண்டியன், டாக்டர் ஜாஸ்மின் சந்தோஷ், மற்றும் டாக்டர் தீபா.T.துரை ஆகியோரது தயாரிப்பில் ஏஞ்சல் ஸ்டுடியோ சார்பில் SJ.சூர்யா அவர்கள் வழங்கும் பொம்மை திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருந்த நிலையில் வரும் ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பொம்மை திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர் தற்போது வெளியானது. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த அந்த ட்ரெய்லர் இதோ…
 

சித்தார்த்தின் ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னராக வரும் டக்கர்... துள்ளலான ரெயின்போ திரளில் வீடியோ பாடல் இதோ!
சினிமா

சித்தார்த்தின் ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னராக வரும் டக்கர்... துள்ளலான ரெயின்போ திரளில் வீடியோ பாடல் இதோ!

மாரி செல்வராஜின் மாமன்னன் பட புது சர்ப்ரைஸ்... உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷின் ரொமான்டிக்கான நெஞ்சமே நெஞ்சமே பாடல் இதோ!
சினிமா

மாரி செல்வராஜின் மாமன்னன் பட புது சர்ப்ரைஸ்... உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷின் ரொமான்டிக்கான நெஞ்சமே நெஞ்சமே பாடல் இதோ!

சினிமா

"மாமன்னன் படத்தின் ரிலீஸ் எப்போது?"- திட்டமிட்டிருக்கும் தேதியை பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்! வைரல் வீடியோ