செம்ம COOL & MASS லுக்கில் சிலம்பரசன்TR... STR48 படத்திற்காக தயாராகிறாரா? சோசியல் மீடியாவை அதிரவிடும் புகைப்படங்கள் இதோ!

சிலம்பரசன்TR லண்டனில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியீடு,silambarasan tr new photos from london str48 desingh periyasamy | Galatta

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன்.TR தற்போது செம்ம மாஸான புதிய லுக்கில் லண்டனில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.  தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட நடிகர் சிலம்பரசன் தன் மீது இருந்த அத்தனை எதிர்மறை விமர்சனங்களையும் தவிர்ப்படியாக்கிவிட்டு தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு தற்போது முற்றிலும் புதிய வடிவில் தனது அதிரடியான புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்த புதிய வெற்றிப் பயணம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படத்திலிருந்து தொடங்கியது என சொல்லலாம். சற்றும் யாரும் எதிர்பாராத வகையில் தனது உடல் எடையை குறைத்து அட்டகாசமான புதிய தோற்றத்தில் மாநாடு படத்தில் களமிறங்கிய சிலம்பரசன்TR-க்கு அதன் பலனாக மாபெரும் வெற்றி பரிசாக கிடைத்தது.

மாநாடு படத்தில் இருந்த அந்த புதிய தோற்றத்தின் மீது இருந்த ஆச்சரியம் கொஞ்சமும் குறைவதற்கு முன்பு மேலும் ஒரு ஆச்சரியத்தை வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் கொடுத்தார் சிலம்பரசன்TR. இன்னும் உடல் மெலிந்து முத்து என்கிற அந்த கதாபாத்திரமாகவே மாறி தனது முழு உழைப்பை கொட்டிய சிலம்பரசன்.TR வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிறந்த நடிகராக ரதிகர்களை மிரள வைத்தார். வழக்கமான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு தரமான கேங்ஸ்டர் படமாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக வெந்து தணிந்தது காடு பார்ட் 2 திரைப்படமும் விரைவில் தயாராக இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கன்னட படமான மஃப்டி பட ரீமேக்காக சிலம்பரசன்.TR நடித்த பத்து தல படமும் சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த வரிசையில் அடுத்ததாக, நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் STR48 திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கிறார். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் STR48 திரைப்படத்தை தயாரிக்கிறது. ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் STR48 திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவருமான எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகரான இயக்குனர் தேசிங் பெரியசாமி, சூப்பர் ஸ்டாருக்காக எழுதிய ஒரு அதிரடியான கதை தான் STR48 படத்தின் கதை என்றும் இதில் சிலம்பரசன் நடிப்பதற்காக சிறு சிறு மாறுதல்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. பிரம்மாண்டமான பீரியட் ஆக்சன் படமாக STR48 திரைப்படம் தயாராக இருப்பதாக தெரிகிறது. எனவே இதற்கான பணிகளுக்காக தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காக சிலம்பரசன்.TR தற்போது லண்டன் சென்று இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. இந்த நிலையில் லண்டனில் இருக்கும் சிலம்பரசன்TRன் புதிய மாஸான லுக்கின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் தற்போது சிலம்பரசன்TR பகிரந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வரும் அந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கை காணலாம்.
 

 

View this post on Instagram

A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)

சினிமா

"மாமன்னன் படத்தின் ரிலீஸ் எப்போது?"- திட்டமிட்டிருக்கும் தேதியை பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்! வைரல் வீடியோ

ஆர்யாவின் ACTION PACKED காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... கவனத்தை ஈர்க்கும் அசத்தலான SNEAK PEEK வீடியோ இதோ!
சினிமா

ஆர்யாவின் ACTION PACKED காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... கவனத்தை ஈர்க்கும் அசத்தலான SNEAK PEEK வீடியோ இதோ!

'வில்லன் மாதிரியும் இருக்கும்!'-மாமன்னன் படத்தில் தன் கதாபாத்திரம் குறித்த உண்மையை உடைத்த வைகைப்புயல் வடிவேலு! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

'வில்லன் மாதிரியும் இருக்கும்!'-மாமன்னன் படத்தில் தன் கதாபாத்திரம் குறித்த உண்மையை உடைத்த வைகைப்புயல் வடிவேலு! ட்ரெண்டிங் வீடியோ