சூப்பர் ஹீரோவாக திரையரங்குகளில் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி.. – ‘வீரன்’ படத்தின் கலகலப்பான காட்சியை வெளியிட்ட படக்குழு.. வைரல் வீடியோ

கலகலப்பான காட்சியை வெளியிட்ட வீரன் படக்குழு வைரல் வீடியோ உள்ளே - HipHop adhi Veeran sneak peek out now | Galatta

நவீன தமிழ் சினிமாவில்  முதல் முறையாக சூப்பர் ஹீரோ கதைகளத்தில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘வீரன்’. ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து ஹிட் அடித்த ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இயக்குனர் ARK சரவணன் இயக்கத்தில் அடுத்த படைப்பாக  வித்யாசமான கதைகளத்தில் உருவாகியிருக்கும் வீரன் படத்தில் சூப்பர் ஹீரோவாக ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ளார். மேலும் படத்தில் இவருடன் வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், நக்கலைட்ஸ் சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக் D மேனன் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா. GK படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து டிரெண்ட்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் உருவான இப்படம் கடந்த ஜூன் 2 ம் தேதி வெளியாகி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.  இந்நிலையில் ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் வீரன் படத்தில் இடம் பெற்றுள்ள கலகலப்பான சிறப்பு காட்சியை வெளியிட்டுள்ளது படக்குழு.. சிங்கப்பூரிலிருந்து மீண்டும் சொந்த ஊருக்கு வந்த குமரன் (ஹிப்ஹாப் ஆதி) தன் தோழியை சந்திக்கும் தருணமாகவும் அந்த நேரத்தில் தோழிக்கு பெண் பார்க்கும் காட்சியும் கலகலப்பாக இந்த காட்சி அமைந்துள்ளது தற்போது இந்த காட்சி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் ஹீரோவாகவும் இயக்குனராகவும் என்று பன்முக திறமையுடன் வலம் வந்து இளைஞர்களை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி வீரன் படத்தையடுத்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அடுத்ததாக விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் தற்போது இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கி வரும் ‘PT Sir’ என்ற படத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

 

இனி புது ரூட்.. ஹோட்டல் தொழிலதிபரான இயக்குனர் அமீர்.. திறப்பு விழாவில் பங்கேற்ற வெற்றிமாறன், சூரி.. – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

இனி புது ரூட்.. ஹோட்டல் தொழிலதிபரான இயக்குனர் அமீர்.. திறப்பு விழாவில் பங்கேற்ற வெற்றிமாறன், சூரி.. – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

புராண திரைப்படங்களை புரட்டி போட்ட கலைஞர் கருணாநிதி.. காலம் கடந்தும் கர்ஜிக்கும் திரைப்பயணம் குறித்த ஒரு பார்வை இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

புராண திரைப்படங்களை புரட்டி போட்ட கலைஞர் கருணாநிதி.. காலம் கடந்தும் கர்ஜிக்கும் திரைப்பயணம் குறித்த ஒரு பார்வை இதோ..

'சந்திரமுகி 2' படத்தையடுத்து தமிழில் மிக முக்கியமான திரைப்படத்தில் ஆஸ்கார் இசையமைப்பாளர் கீரவாணி.. - வைரலாகும் அப்டேட் இதோ..
சினிமா

'சந்திரமுகி 2' படத்தையடுத்து தமிழில் மிக முக்கியமான திரைப்படத்தில் ஆஸ்கார் இசையமைப்பாளர் கீரவாணி.. - வைரலாகும் அப்டேட் இதோ..