சித்தார்த்தின் ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னராக வரும் டக்கர்... துள்ளலான ரெயின்போ திரளில் வீடியோ பாடல் இதோ!

சித்தார்த்தின் தக்கர் பட ரெயின்போ திரளில் வீடியோ பாடல் வெளியீடு,siddharth in takkar movie rainbow thiralil video song out now | Galatta

இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சித்தார்த் நடிப்பில் தயாராகி இருக்கும் டக்கர் திரைப்படத்திலிருந்து ரெயின்போ திரளில் எனும் வீடியோ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கிய நடிகர் சித்தார்த் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஆயுத எழுத்து திரைப்படத்தில் சூர்யா, மாதவன் ஆகியோரோடு இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை அடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த சித்தார்த் நடிப்பில் கடைசியாக தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிகப்பு மஞ்சள் பச்சை மற்றும் அருவம் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. அதேபோல் தெலுங்கில் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஷர்வானந்த் உடன் இணைந்து மகா சமுத்திரம் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருந்தார். இந்த வரிசையில் அடுத்தடுத்து சித்தார்த் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க, தற்போது தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழும் தயாரிப்பாளர் சசிகாந்த் முதல் முறை இயக்குனராக களமிறங்க, மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் டெஸ்ட் திரைப்படத்திலும் சித்தார்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் இயக்குனர் S.U.அருண் குமார் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் சித்தா திரைப்படத்திலும் கதையின் நாயகனாக சித்தார்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களில் நடித்துவரும் சித்தார்த் நடிப்பில் அடுத்து வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் தான் டக்கர்.

கப்பல் படத்தின் இயக்குனர் கார்த்திக்.ஜி.க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து திவ்யன்ஷா கதாநாயகியாக நடித்திருக்கும் டக்கர் திரைப்படத்தில் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். PASSION STUDIOS சார்பில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் டக்கர் திரைப்படத்திற்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவில், ஜி.ஏ.கௌதம் படத்தொகுப்பு செய்ய, நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். பக்கா ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக வெளிவர இருக்கும் டக்கர் திரைப்படம் வரும் ஜூன் 9ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் டக்கர் திரைப்படத்திலிருந்து ரெயின்போ திரளில் எனும் வீடியோ பாடல் தற்போது வெளியானது. நடிகர் சிலம்பரசன்.TR மற்றும் நடிகை ஆண்ட்ரியா இணைந்து பாடி இருக்கும் இந்த பாடல் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த துள்ளலான ரெயின்போ திரளில் வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

ஆர்யாவின் ACTION PACKED காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... கவனத்தை ஈர்க்கும் அசத்தலான SNEAK PEEK வீடியோ இதோ!
சினிமா

ஆர்யாவின் ACTION PACKED காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... கவனத்தை ஈர்க்கும் அசத்தலான SNEAK PEEK வீடியோ இதோ!

'வில்லன் மாதிரியும் இருக்கும்!'-மாமன்னன் படத்தில் தன் கதாபாத்திரம் குறித்த உண்மையை உடைத்த வைகைப்புயல் வடிவேலு! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

'வில்லன் மாதிரியும் இருக்கும்!'-மாமன்னன் படத்தில் தன் கதாபாத்திரம் குறித்த உண்மையை உடைத்த வைகைப்புயல் வடிவேலு! ட்ரெண்டிங் வீடியோ

'தேவர் மகன் படத்திற்கு பின் இது ஒரு பெரிய படம் எனக்கு!'- மாமன்னன் பற்றி முதல் முறை மனம் திறந்த வைகைப்புயல் வடிவேலு! வீடியோ இதோ
சினிமா

'தேவர் மகன் படத்திற்கு பின் இது ஒரு பெரிய படம் எனக்கு!'- மாமன்னன் பற்றி முதல் முறை மனம் திறந்த வைகைப்புயல் வடிவேலு! வீடியோ இதோ