மாரி செல்வராஜின் மாமன்னன் பட புது சர்ப்ரைஸ்... உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷின் ரொமான்டிக்கான நெஞ்சமே நெஞ்சமே பாடல் இதோ!

மாமன்னன் பட நெஞ்சமே நெஞ்சமே பாடல் வெளியீடு,Maamannan movie nenjame nenjame song out now a r rahman mari selvaraj | Galatta

மாமன்னன் திரைப்படத்திலிருந்து இசைப்புயலின் அடுத்த இசை விருந்தாக நெஞ்சமே நெஞ்சமே பாடல் தற்போது வெளியானது. தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக பரியேறும் பெருமாள் & கர்ணன் என தனது படங்களால்  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின், முன்னதாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகிப்பதால், முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாலும், மாமன்னன் தான் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவர இருக்கும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் மாமன்னன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வருகிற ஜூன் மாதத்தில் மாமன்னன் திரைப்படத்தை வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக நேற்று ஜூன் ஒன்றாம் தேதி மாமன்னன் திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இசை வெளியீட்டு விழா தொடங்குவதற்கு முன்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகிற ஜூன் 29ஆம் தேதி மாமன்னன் திரைப்படத்தை வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தமிழ் சினிமாவில் வைகைப்புயல் வடிவேலு அவர்களை இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட புதிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இந்த கதாப்பாத்திரம் குறித்து பேசியபோது "இது கொஞ்சம் வில்லன் மாதிரியும் இருக்கும்" என வடிவேலு அவர்கள் தெரிவித்து இருப்பதால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதுபோக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் மாமன்னன் திரைப்படத்தில் "ராசா கண்ணு" எனும் ஒரு பாடலை பாடி ஏற்கனவே ரசிகர்களின் இதயங்களை உருக்கி இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று மாமன்னன் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியானதை தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மாமன்னன் திரைப்படத்திலிருந்து நெஞ்சமே நெஞ்சமே என்ற அற்புதமான மெலடி பாடலின் லிரிக் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். கவிஞர் யுகபாரதி அவர்களின் வரிகளில் பாடகர்கள் விஜய் யேசுதாஸ் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் அவர்கள் இணைந்து பாடியுள்ள இசைப்புயலின் இந்த நெஞ்சமே நெஞ்சமே பாடல் ரசிகர்கள் மனதை கேட்ட உடன் பற்றிக் கொண்டது. ரொமான்டிக்கான அந்த நெஞ்சமே நெஞ்சமே பாடலை கீழே உள்ள லிங்கில் கேட்டு மகிழுங்கள்.
 

'வில்லன் மாதிரியும் இருக்கும்!'-மாமன்னன் படத்தில் தன் கதாபாத்திரம் குறித்த உண்மையை உடைத்த வைகைப்புயல் வடிவேலு! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

'வில்லன் மாதிரியும் இருக்கும்!'-மாமன்னன் படத்தில் தன் கதாபாத்திரம் குறித்த உண்மையை உடைத்த வைகைப்புயல் வடிவேலு! ட்ரெண்டிங் வீடியோ

'தேவர் மகன் படத்திற்கு பின் இது ஒரு பெரிய படம் எனக்கு!'- மாமன்னன் பற்றி முதல் முறை மனம் திறந்த வைகைப்புயல் வடிவேலு! வீடியோ இதோ
சினிமா

'தேவர் மகன் படத்திற்கு பின் இது ஒரு பெரிய படம் எனக்கு!'- மாமன்னன் பற்றி முதல் முறை மனம் திறந்த வைகைப்புயல் வடிவேலு! வீடியோ இதோ

பொன்னியின் செல்வன் 2 பட அட்டகாசமான சர்ப்ரைஸ்... மனதை மயக்கும் சின்னஞ்சிறு நிலவே வீடியோ பாடல் இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 பட அட்டகாசமான சர்ப்ரைஸ்... மனதை மயக்கும் சின்னஞ்சிறு நிலவே வீடியோ பாடல் இதோ!