பிரபல ராம்ப்வாக் மாடலாக அறிமுகமாகி அடுத்து சினிமாவில் வளர்ந்த்து வரும் இளம் ஹீரோயினாக அசத்தி வருபவர் மாதுரி.2017-ல் நடைபெற்ற மிஸ் சௌத் இந்தியா அழகிப்போட்டியில் இறுதி வரை சென்று அசத்தினார் மாதுரி.அடுத்து சில விளம்பர படங்கள் உள்ளிட்டவற்றில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

இதனை அடுத்து ஜெய்,வாணி போஜன் உள்ளிட்டோர் இணைந்து நடித்த ட்ரிப்பிள்ஸ் வெப் சீரிஸில் முன்னணி வேடத்தில் நடித்து தனது என்ட்ரியை கொடுத்தார் மாதுரி.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பூமிகா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

ஹிப்ஹாப் தமிழா நடித்து சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த சிவகுமாரின் சபதம் படத்தில் மாதுரி ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார்.அடுத்து சில முக்கிய படங்களில் ஹீரோயினாக நடிக்க தயாராகி வருகிறார் மாதுரி.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்துவருவார்.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பிகினி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் மாதுரி.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.