சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் டாக்டர். கோலமாவு கோகிலா புகழ் இயக்குனர் நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர். கேங் லீடர் படத்தில் நடித்த ப்ரியங்கா அருள் மோகன் இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

Sivakarthikeyans Doctor New Set of Stills Released Sivakarthikeyans Doctor New Set of Stills Released

படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் லாக்டவுனில் எடிட்டிங் பணிகள் நடந்து வந்தது. படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அரசு சொல்லும் நிபந்தனைகளை பொறுத்து எங்கு நடக்கும் என்று முடிவுசெய்யப்படும் என்று இயக்குனர் நெல்சன் தெரிவித்தார். சமீபத்தில் கலாட்டா குழுவுடன் முகநூல் வாயிலாக லைவ்வில் தோன்றிய நெல்சன், படத்தில் வித்தியாசமான SK இருப்பார் என்று தெரிவித்தார். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி படத்தின் ட்ரைலர் அமையும் என்ற ருசிகர செய்தியை கூறினார். 

Sivakarthikeyans Doctor New Set of Stills Released

தற்போது படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. அதில் ஓர் புகைப்படத்தில் கிரிக்கெட் வீரர் கெட்டப்பில் உள்ளார் நடிகர் யோகிபாபு. இதைக்கண்ட ரசிகர்கள் படத்தில் கிரிக்கெட்டராக நடிக்கிறாரா என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர். எதுவாக இருக்கட்டும், இந்த காட்சி திரையில் தோன்றும் போது சிரிப்பு மழையில் அரங்கமே நனையும் என்று கூறலாம்.