கடந்த 2009-ம் ஆண்டு வெளியான யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நீத்து சந்திரா. அதைத்தொடர்ந்து தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன், சேட்டை, சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். யோகா, நடிப்பு, நடனத்தை தாண்டி மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் ஸ்டண்ட் கலையிலும் சிறந்து விளங்கும் நடிகையாக திகழ்கிறார். 

Neetu Chandra Funny Reaction On Mysskin Meme

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர் திரை பிரபலங்கள். உடற்பயிற்சி, வீட்டு வேலைகள், நடனம், பாடல், சமையல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒரு சிலர் சமூக வலைத்தளங்களின் நேரலையில் தோன்றி ரசிகர்களோடு உரையாடி வருகின்றனர். 

Neetu Chandra Funny Reaction On Mysskin Meme

இந்நிலையில் நடிகை நீத்து சந்திரா தனது ட்விட்டர் பதிவில், இயக்குனர் மிஸ்கின் கொண்டு உருவான மீம் வீடியோவிற்கு ரியாக்ட் செய்துள்ளார். அந்த வீடியோவில் மிஸ்கின் பட பாணியில் கிரிக்கெட் விளையாடி பதிவு செய்துள்ளனர் நெட்டிசன்கள். அதை பகிர்ந்த நீத்து, லவ்லி ஃபன்னியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். மிஸ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில், கன்னித்தீவு பொண்ணா எனும் பாடலுக்கு அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தியிருப்பார் நீத்து.