16 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த மாப்பிள்ளை மணமேடையிலேயே கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் நிலக்கோட்டை பக்கதியைச் சேர்ந்த 21 வயதான உதயகுமார், வாடிப்பட்டி அடுத்த கரட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். 

Man sexual assault on 16 year old girl

காதல் என்னும் பெயரில், சிறுமியிடம் அத்துமீறிய அவர், ஆசைவார்த்தைகள் கூறி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகவும், ஆசை வார்த்தைகள் கூறி, இருவரும் பல இடங்களுக்குச் சென்றுவந்துள்ளனர்.

இதில், சிறுமி கருவுற்ற நிலையில், உடனடியாக தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி, உதயகுமாரிடம் சிறுமி வற்புறுத்தி உள்ளார். ஆனால், திருமணம் செய்துகொள்ள மறுத்த உதயகுமார், அந்த சிறுமியை தொடர்ந்து தவிர்ந்து வந்துள்ளார்.

சிறுமி திருமணம் செய்யத் தொடர்ந்து வற்புறுத்தவே, கோபமடைந்த உதயகுமார், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.

மேலும், உதயகுமார் வீட்டில், அவருக்கு வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் ஏற்பாடு செய்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி, மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

Man sexual assault on 16 year old girl

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், திருமணம் நடைபெறும் திருமண மண்டபத்திற்கு விரைந்த சென்றனர். ஆனால், அதற்குள் உதயகுமார் அந்த பெண்ணிற்குத் தாலி கட்டியுள்ளார்.

ஆனாலும், மணமேடைக்கு சென்ற போலீசார், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, மணமேடையிலேயே மாப்பிள்ளையைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். இதனால், திருமணத்திற்கு மணமக்களை வாழ்த்த வந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.