பட்டப்பகலில் பெண்ணை கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடியவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்துள்ள புது பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த கோபி, அப்பகுதியில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இரவது மணி 42 வயதான யசோதா ராணி, அதே பகுதியில் டெஸ்லர் கடை நடத்தி வந்தார்.

Man murders woman for avoiding illicit affair

இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ள நிலையில், அவர்கள் இருவரும் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே, யசோதா ராணிக்கு அதே பகுதியில் உள்ள கணபதி புரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருடன் தவறான பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாகத் தகாத உறவிலிருந்து வந்த அந்த பெண், தற்போது மனம் திருந்தி அவருடனான தொடர்பைத் துண்டித்து, அவருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த செல்வகுமார், நேரமாக யசோதா ராணியின் கடைக்கு வந்து, அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, யசோதா ராணி அவரிடம் பேச பிடிக்காமல் இருந்துவந்துள்ளார்.

Man murders woman for avoiding illicit affair

இதில், கடும் ஆத்திரமடைந்த செல்வகுமார், கடையிலிருந்த கத்தரிக்கோலால் யசோதா ராணியை குத்தி உள்ளார். இதில், அலறல் சத்தத்துடன் ரத்த வெள்ளத்தில் யசோதா ராணி கீழே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, செல்வகுமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்த வந்த போலீசார் யசோதா ராணியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்கப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த செல்வகுமார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “ தன்னுடன் உண்டான கள்ளக் காதலைத் துண்டித்துக் கொண்டதால் கொலை செய்தேன்” என்று செல்வகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளைச் செய்து வருகின்றனர்.

இதனிடையே, பட்டப்பகலில் பெண்ணை கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம், புது பெருங்களத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.