ஜெயிலர் படத்துடன் மோதும் சிரஞ்சீவியின் வேதாளம் ரீமேக் போலா ஷங்கர்… 'காவாலா' பாணியில் தமன்னாவின் மில்கி பியூட்டி பாடல் இதோ!

சிரஞ்சீவியின் வேதாளம் ரீமேக் போலா ஷங்கர் பட மில்கி பியூட்டி பாடல்,chiranjeevi in bholaa shankar movie milky beauty song out now | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவரும் ஜெயிலர் திரைப்படத்துடன் களமிறங்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வேதாளம் ரீமேக் படமான போலா ஷங்கர் படத்தில் இருந்து மில்கி பியூட்டி எனும் புதிய பாடல் வெளியானது. தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராகவும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் திகழும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர். கிட்டத்தட்ட கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து தனது அட்டகாசமான நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் வால்டர் வீரய்யா. இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் வெளியீடாக சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த வால்டர் வீரய்யா திரைப்படம் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆனது. அடுத்தடுத்து மாஸ் வெற்றி படங்களை கொடுக்கும் சிரஞ்சீவி நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் இன்னும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. 

அந்த வகையில் அடுத்ததாக புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வெ அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சிரஞ்சீவி நடிப்பில் அடுத்த வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் தான் போலா ஷங்கர். தமிழில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான அஜித் குமாரின் வேதாளம் திரைப்படத்தின் நேரடி தெலுங்கு ரீமேக்காக போலா ஷங்கர் திரைப்படம் தயாராகி இருக்கிறது. கதையின் நாயகனாக மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, கதாநாயகியாக தமன்னா நடித்திருக்கிறார். மேலும் ரகு பாபு, முரளி ஷர்மா, ரவிசங்கர், வெண்ணலா கிஷோர், கிஷாந்த், துளசி, ஸ்ரீமுகி, சத்யா, ரஷ்மி கௌதம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஏ கே என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் கிரியேட்டிவ் கமர்சியல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள போலா ஷங்கர் திரைப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்ய மார்த்தாண்ட் . கே. வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். மகதி ஸ்வரா சாகர் இசையமைத்து இருக்கிறார். 

சமீபத்தில் வெளிவந்த போலா ஷங்கர் திரைப்படத்தின் டீசரும் முதல் பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடும் போலா ஷங்கர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகும் அதே சமயத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர்களின் இந்த போலா ஷங்கர் திரைப்படமும் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து இருக்கின்றனர். இந்த நிலையில் போலா ஷங்கர் திரைப்படத்தின் மில்கி பியூட்டி பாடல் தற்போது வெளியானது. ஜெயிலர் படத்தில் முதல் பாடலாக வந்து வைரல் ஹிட்டான காவாலா பாடலில் ரசிகர்களை கவர்ந்த தமன்னா மீண்டும் தனது ஸ்டைலான நடனத்தில் வந்துள்ள  இந்த மில்கி பியூட்டி பாடலிலும் கவனம் ஈர்த்துள்ளார். போலா ஷங்கர் படத்தின் அந்த மில்கி பியூட்டி பாடல் இதோ…
 

சினிமா

"தளபதி விஜயின் லியோ படம் 1000 கோடியை தொடுமா?"- இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சரியான பதில்! ட்ரெண்டிங் வீடியோ

மெகா ஸ்டார் சிரஞ்சீவி - தமன்னாவின் வேதாளம் ரீமேக் பட அடுத்த சர்ப்ரைஸ்… போலா ஷங்கர் பட அசத்தலான புது ப்ரோமோ இதோ!
சினிமா

மெகா ஸ்டார் சிரஞ்சீவி - தமன்னாவின் வேதாளம் ரீமேக் பட அடுத்த சர்ப்ரைஸ்… போலா ஷங்கர் பட அசத்தலான புது ப்ரோமோ இதோ!

SJசூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடிய விஷாலின் மார்க் ஆண்டனி படக்குழு... அட்டகாசமான புது GLIMPSE இதோ!
சினிமா

SJசூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடிய விஷாலின் மார்க் ஆண்டனி படக்குழு... அட்டகாசமான புது GLIMPSE இதோ!