தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் கடைசியாக டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள ப்ரின்ஸ் படம் 2022 தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.மாவீரன் படத்தின் ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வருகிறார்.SK 21 பட ஷூட்டிங்கை விரைவில் தொடங்கவுள்ளார்.இவற்றை தவிர இவர் நடித்துள்ள அயலான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

2016 பொங்கலுக்கு வெளியாகி செம ஹிட் அடித்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்.பொன்ராம் இந்த படத்தினை இயக்கியிருந்தார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.சூரி,ராஜ்கிரண்,சமுத்திரக்கனி என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்றான உன் மேல ஒரு கண்ணு பாடல் வீடியோ 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.