தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு,பாடலாசிரியர்,பாடகர் என பன்முக திறமை கொண்டவராக அசத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

நடிப்பு,நடனம்,காமெடி,எமோஷன் என ஆல் இன் ஒன் Entertainer ஆக சிவகார்த்திகேயன் அவதரித்துள்ளார்.இவரது படங்கள் வெளியானால் திரையரங்குகள் ஹவுஸ்புல் கோலம் கொண்டுள்ளன.சிறியவர் முதல் பெரியவர் வரை இவரது படங்களை ரசித்து பார்த்து வருகின்றனர்.அடுத்த ஜெனெரேஷனின் உச்ச நட்சத்திரமாக அவதரிக்க சிவகார்த்திகேயன் இப்போதே ரெடி ஆகிவிட்டார்.

இவரது டாக்டர் மற்றும் டான் ஆகிய கடைசி இரண்டு ரிலீஸ்களுமே 100 கோடிகளை கடந்து பெரிய சாதனை படைத்துள்ளது.இவர் நடித்துள்ள ப்ரின்ஸ் படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.அதீத எதிர்பார்ப்புக்கிடையே இந்த படத்தின் ரிலீஸை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.இந்த படமும் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமையும் என தெரிகிறது.

இதனை அடுத்து அயலான்,ராஜ்குமார் பெரியசாமி படம்,வெங்கட் பிரபு படம் என செம பிஸியாக நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.ப்ரின்ஸ் படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் வேளையில் சிவகார்திகேயனின் அக்டோபர் ரிலீஸ்கள் குறித்த ஒரு சிறப்பு கனெக்ட் கிடைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் அக்டோபர் 2016-ல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.அதே போல டாக்டர் படம் 2021 அக்டோபர் மாதம் வெளியாகி மெகா ஹிட் அடித்து 100 கோடிகளை கடந்தது.இந்த வரிசையில் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் படம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது