'SK ரசிகர்களே தயாரா?'- சிவகார்த்திகேயனின் அதிரடியான மாவீரன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு... ட்ரெண்டாகும் மிரட்டலான புது வீடியோ இதோ!

சிவகார்த்திகேயனின் அதிரடியான மாவீரன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,sivakarthikeyan in maaveeran movie release date announcement | Galatta

தமிழ் சினிமாவின் இன்றியமையாத கதாநாயகர்களில் ஒருவராக வளர்ந்து முன்னணி நட்சத்திர நாயகர்களில் பட்டியலில் முன்னணி இடத்தை பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. முன்னதாக, இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் VFX பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் அயலான் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். 

மேலும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK24 திரைப்படத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இதனை அடுத்து முதல் முறையாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் இத்திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் இப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீசீசில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்தின் முதல் பாடலான சீனா சீனா பாடலும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான (OTT) டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் நிலையில், காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக மாவீரன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் புதிய அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இதோ…
 

பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 பட முன்னோட்டமாக வந்த புது டீசர்... உலகநாயகன் கமல்ஹாசன் குரலில் அட்டகாசமான வீடியோ இதோ!
சினிமா

பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 பட முன்னோட்டமாக வந்த புது டீசர்... உலகநாயகன் கமல்ஹாசன் குரலில் அட்டகாசமான வீடியோ இதோ!

தளபதி விஜயின் லியோ பட அடுத்த மாஸ் அப்டேட் LOADING… ரசிகர்களை உற்சாகப்படுத்திய முக்கிய தொழில்நுட்ப கலைஞரின் ட்வீட்! விவரம் உள்ளே
சினிமா

தளபதி விஜயின் லியோ பட அடுத்த மாஸ் அப்டேட் LOADING… ரசிகர்களை உற்சாகப்படுத்திய முக்கிய தொழில்நுட்ப கலைஞரின் ட்வீட்! விவரம் உள்ளே

நான் கார் துடைக்கிற பையன் தானே... வாழ்க்கையை மாற்றிய ஐஸ்கிரீம் பற்றி பேசிய ராகவா லாரன்ஸின் பக்கா மாஸ் வீடியோ இதோ!
சினிமா

நான் கார் துடைக்கிற பையன் தானே... வாழ்க்கையை மாற்றிய ஐஸ்கிரீம் பற்றி பேசிய ராகவா லாரன்ஸின் பக்கா மாஸ் வீடியோ இதோ!