சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் சில காட்சிகள் நீக்கம்.. காரணம் என்ன?- முன்னணி விநியோகஸ்தரின் விளக்கம் இதோ!

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் சில காட்சிகள் நீக்கம் காரணம் உள்ளே,sivakarthikeyan in maaveeran movie gets few cuts in uk for 12a rating | Galatta

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து தற்போது மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் மாவீரன் திரைப்படத்தின் UK ரிலீஸுகாக சில காட்சிகள் நீக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகப் பிடித்த நடிகர்களில் ஒருவராக ஆரம்பத்தில் சின்ன்ததிரையில் இருந்து தனது பயணத்தை தொடங்கி பின் வெள்ளித்திரையில் நடிகராக களமிறங்கி தற்போது தமிழ் சினிமாவின் இன்றியமையாத நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் மிகவும் ரசிக்கும் வகையிலான பக்கா எண்டர்டைனிங் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த மிகப்பெரிய வெற்றியை பெற தவறியது. பிரின்ஸ் திரைப்படம் கவனத்தை ஈர்க்கத் தவறிய போதும் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். 

அந்த வகையில் அடுத்ததாக இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களோடு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக தெரிகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வரும் என ரசிகர்கள் அவர்களோடு காத்திருக்கின்றனர். முன்னதாக இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.  தற்சமயம் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். 

இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் வித்தியாசமான ஃபேன்டஸி ஆக்சன் படமாக வெளிவந்த திரைப்படம் தான் மாவீரன். யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் வென்ற மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முதல் முறையாக முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். 

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க,ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ள திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வரும் மாவீரன் திரைப்படம் 50 கோடிகளுக்கு மேல் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த வாரம் UKவில் மாவீரன் திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில், UKவில் 12A என்ற என்ற ரேட்டிங் பெறுவதற்காக மாவீரன் படத்தில் சில காட்சிகளில் சில இடங்கள் நீக்கப்பற்றிருப்பதாக UKவில் தமிழ் படங்களை வெளியிடும் முன்னணி நிறுவனமான அஹிம்ஸா என்டர்டெய்மென்ட் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

We’ve now made a few small cuts to achieve a 12A rating for #Maaveeran in UK (from today onwards). Tickets selling fast for Sunday shows! 💥 @Siva_Kartikeyan

Book your show now 👉 https://t.co/KYkytsIx6l pic.twitter.com/h2hcWkQ9W3

— Ahimsa Entertainment (@ahimsafilms) July 23, 2023

உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் 'Vishual Treat' உறுதி... இயக்குனர் ஷங்கர் பகிர்ந்த மாஸ் அப்டேட் இதோ!
சினிமா

உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் 'Vishual Treat' உறுதி... இயக்குனர் ஷங்கர் பகிர்ந்த மாஸ் அப்டேட் இதோ!

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவிற்கு இலவச டிக்கெட்டுகள்... சன் பிக்சர்ஸ் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
சினிமா

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவிற்கு இலவச டிக்கெட்டுகள்... சன் பிக்சர்ஸ் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

'போர் வீரன்.. தலைவன்.. அரசன்..!' சூர்யாவின் கங்குவா படக்குழு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்... மிரள வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
சினிமா

'போர் வீரன்.. தலைவன்.. அரசன்..!' சூர்யாவின் கங்குவா படக்குழு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்... மிரள வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் இதோ!