"எனது உயிர்கள்" - செல்ல மகன்களை கொஞ்சம் நயன்தாரா... விக்னேஷ் சிவன் பகிர்ந்த ட்ரெண்டிங் புகைப்படம் இதோ!

நயன்தாரா மகன்களை கொஞ்சம் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்,vignesh shivan shared latest photo of nayanthara with their twin sons | Galatta

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது செல்ல மகனை ஏந்தி கொஞ்சம் அழகிய தருணத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக வெளியிட அந்த புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். பிறகு தனது இரண்டாவது படமாக நடிகர் தனுஷ் தயாரிப்பில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடிக்க, வெளிவந்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் பக்கம் ஈர்த்தார். தொடர்ந்து சூர்யா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற, மீண்டும் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விக்னேஷ் சிவன் இணைந்தார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியோடு லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கடந்த (2022) ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. 

இதனை அடுத்து தனது அடுத்த திரைப்படத்தில் அஜித் குமாரை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் விக்னேஷ் சிவன் பெற்றார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்க AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ்வரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது பின்னர் சமீபத்தில் திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அடுத்ததாக ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாக்கும் புதிய படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் அத்திரைப்படத்தில் கோமாளி மற்றும் லவ் டுடே படத்தின் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகினர். இந்த இரண்டு ஆண் குழந்தைகளையும் உயிர் - உலகம் என குறிப்பிட்டு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டனர். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன், அவ்வப்போது தனது குழந்தைகளோடு நடிகை நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது இயக்குனர்களுக்கு சிவன் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவிலும் வைரலாகி இருக்கிறது. நடிகை நயன்தாரா தனது செல்ல மகனை கையில் ஏந்தி கொஞ்சும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன், "எனது உயிர்கள்... ஞாயிற்றுக்கிழமை நல்லபடியாக நகர்ந்தது... முழுக்க முழுக்க அன்பு  மற்றும் எளிமையான தருணங்களோடு மட்டும்..." எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் இதோ…


 

 

View this post on Instagram

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவிற்கு இலவச டிக்கெட்டுகள்... சன் பிக்சர்ஸ் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
சினிமா

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவிற்கு இலவச டிக்கெட்டுகள்... சன் பிக்சர்ஸ் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

'போர் வீரன்.. தலைவன்.. அரசன்..!' சூர்யாவின் கங்குவா படக்குழு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்... மிரள வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
சினிமா

'போர் வீரன்.. தலைவன்.. அரசன்..!' சூர்யாவின் கங்குவா படக்குழு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்... மிரள வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

தளபதி விஜயின் லியோ படத்தோடு மோதும் முன்னணி மாஸ் ஹீரோவின் அதிரடி படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்தோடு மோதும் முன்னணி மாஸ் ஹீரோவின் அதிரடி படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு