'போர் வீரன்.. தலைவன்.. அரசன்..!' சூர்யாவின் கங்குவா படக்குழு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்... மிரள வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

சூர்யாவின் கங்குவா பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு,suriya in kanguva movie first look poster out now | Galatta

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்கு அடுத்த சர்ப்ரைஸாக கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சூர்யா அவர்களுக்கு உலகெங்கும் இருக்கும் பல கோடி ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கலாட்டா குழுமமும் தனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகராக திகழும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். முதல் முறையாக இயக்குனர் வெற்றிமாறன் உடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா கலைப்புலி.S.தாணு அவர்களின் தயாரிப்பில் நடிக்கும் வாடிவாசல் படத்திற்காக பிரத்யேகமாக காளை ஒன்று ரோபோவாக அனிமேட்ரானிக்ஸ் முறையில் தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்காக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்து வரும் படத்திலும் சூர்யா மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த வரிசையில் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் தான் கங்குவா. நடிகர் சூர்யாவின் திரைப் பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிப்பில் உருவாகும் கங்குவா திரைப்படத்தை UV கிரியேஷன்ஸ் நிறுவனம் வழங்குகிற பிரம்மாண்ட படைப்பாக மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிற திரைப்படம் தான் கங்குவா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை திஷா பதாணி கதாநாயகியாக நடிக்கிறார். 

மிரள வைக்கும் பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் கங்குவா திரைப்படம் ஒரு இன்டர்நேஷனல் கதைக்களம் கொண்ட திரைப்படமாக தயாராவதால் ரசிகர்களுக்கு விருந்தாக 3D தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அட்டகாசமான போர் காட்சிகள் கொண்ட கங்குவா திரைப்படத்தின் VFX பணிகளுக்காக மட்டுமே பல கோடி ரூபாயை செலவிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்தாலும் இந்த கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால் கங்குவா படம் அடுத்த 2024 ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிலன் கலை இயக்கத்தில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்யும் கங்குவா திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். துணிவு படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் கங்குவா திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். 

தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிகபட்சமாக கங்குவா திரைப்படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான உரிமம் மட்டும் 80 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் வீடியோவில் வியாபாரம் நடந்துள்ளதாக சமீபத்தில் தயாரிப்பாளர் K.ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் முதல் GLIMPSE வீடியோவை நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக இன்று ஜூலை 23ம் தேதி சரியாக 12.01 மணிக்கு வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் பிறந்த நாளுக்கு அடுத்த சர்ப்ரைஸாக கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. மிரள வைக்கும் கங்குவா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

A warrior. A leader. A King!#Kanguva🦅

Presenting you the #KanguvaFirstLook#GlimpseOfKanguva
▶️https://t.co/REvjXHt1cS#HappyBirthdaySuriya@Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @kegvraja @UV_Creations @KvnProductions @saregamasouth @vetrivisuals @supremesundar pic.twitter.com/MAPs7prTbw

— Studio Green (@StudioGreen2) July 23, 2023

யோகி பாபுவின் அடுத்த அட்டகாசமான படம்... அசத்தலான டைட்டில் உடன் வந்த அறிவிப்பு GLIMPSE இதோ!
சினிமா

யோகி பாபுவின் அடுத்த அட்டகாசமான படம்... அசத்தலான டைட்டில் உடன் வந்த அறிவிப்பு GLIMPSE இதோ!

சூர்யாவின் பிறந்தநாளுக்கு பக்கா மாஸ் ட்ரீட் கொடுத்த கங்குவா படக்குழு... இணையத்தை அதிரவிடும் மிரட்டலான GLIMPSE இதோ!
சினிமா

சூர்யாவின் பிறந்தநாளுக்கு பக்கா மாஸ் ட்ரீட் கொடுத்த கங்குவா படக்குழு... இணையத்தை அதிரவிடும் மிரட்டலான GLIMPSE இதோ!

சினிமா

"மாவீரன் பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் கைகோர்த்த காரணம் இது தான்... உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்! வைரல் வீடியோ