சிவகார்த்திகேயனின் ப்ளாக்பஸ்டர் மாவீரன் பட ஸ்பெஷல் ட்ரீட்... அதிரடியான After-Release டீசர் இதோ!

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட After-Release டீசர் வெளியீடு,Sivakarthikeyan in maaveeran movie after release teaser out now | Galatta

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்திலிருந்து புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தனக்கென தனி பாணியில் தொடர்ந்து பக்கா என்டர்டைனிங் திரைப்படங்களாக கொடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் தனது பயணத்தின் ஆரம்பக் கட்டத்தில் தொலைக்காட்சியில் மிமிக்ரி கலைஞராக போட்டியாளராக தொடங்கியவர். பின் தொகுப்பாளராக படிப்படியாக வளர்ந்து பின்னர் தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கி தற்போது இன்றியமையாத நட்சத்திர நாயகர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கும் சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அனைத்து வயது ரசிகர்களாலும் ரசிக்கப்படுகின்றன. இருப்பினும் அந்த வகையில் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை பெற தவறியது. 

ஆனாலும் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். இதனையடுத்து இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களோடு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக தெரிகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வரும் என ரசிகர்கள் அவர்களோடு காத்திருக்கின்றனர்.முன்னதாக இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனிடையே சிவகார்த்திகேயன் ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ள திரைப்படம் தான் மாவீரன். யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் வென்ற மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகளும் விருமன் படத்தின் நாயகியுமான அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முதல் முறையாக முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வரும் மாவீரன் திரைப்படம் 50 கோடிகளுக்கு மேல் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் வெளிவந்துள்ளன இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான AFTER RELEASE டீசர் ஒன்றை படக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். கவனத்தை ஈர்க்கும் அந்த டீசர் இதோ…
 

'போர் வீரன்.. தலைவன்.. அரசன்..!' சூர்யாவின் கங்குவா படக்குழு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்... மிரள வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
சினிமா

'போர் வீரன்.. தலைவன்.. அரசன்..!' சூர்யாவின் கங்குவா படக்குழு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்... மிரள வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

தளபதி விஜயின் லியோ படத்தோடு மோதும் முன்னணி மாஸ் ஹீரோவின் அதிரடி படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்தோடு மோதும் முன்னணி மாஸ் ஹீரோவின் அதிரடி படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பவன் கல்யாண் - சாய் தேஜ் காம்போவின் கலக்கலான ப்ரோ… சமுத்திரகனியின் வினோதய சித்தம் ரீமேக் பட அசத்தலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

பவன் கல்யாண் - சாய் தேஜ் காம்போவின் கலக்கலான ப்ரோ… சமுத்திரகனியின் வினோதய சித்தம் ரீமேக் பட அசத்தலான ட்ரெய்லர் இதோ!