ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சிவகார்த்திகேயனின் ஏலியன் சயின்ஸ் பிக்சன் அயலான் பட டீசர்... பிரம்மிக்க வைக்கும் விஷுவல் ட்ரீட் இதோ!

சிவகார்த்திகேயனின் அயலான் பட டீசர் வெளியீடு,Sivakarthikeyan in ayalaan teaser out now | Galatta

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் திரைப்படத்தின் பிரமிப்பூட்டும் டீசர் தற்போது வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. தொலைக்காட்சியின் வாயிலாக தமிழ்நாட்டு மக்களின் மனதில் இடம் பிடித்து சின்னத்திரையில் இருந்து தனது கடின உழைப்பால் வெள்ளித்திரைக்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய ஹீரோக்களில் ஒருவராகவும் தனக்கென மிகப் பெரிய இடத்தை பிடித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படங்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த வகையில் கடைசியாக மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அடுத்ததாக நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சிவகார்த்திகேயன் 23 வது திரைப்படமான SK23 திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இந்திய சினிமாவில் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுடன் முதல் முறை இணையும் சிவகார்த்திகேயன் வரும் 2024 ஆம் ஆண்டில் SK24 படத்தில் நடிக்கிறார். முன்னதாக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK21 தற்போது நடித்து வருகிறார். இதனிடையே நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கும் சிவகார்த்திகேயனின் மிக முக்கிய படமான அயலான் வருகிற 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ள அயலான் திரைப்படத்தில், இஷா கோபிகர், சரத் கேல்கர், பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அயலான் திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அயலான் திரைப்படத்தின் முதல் பாடலான “வேற லெவல் சகோ” எனும் பாடல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருந்தது. 

இதுவரை இந்திய சினிமா பார்த்திராத அட்டகாசமான ஒரு ஏலியன் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகும் இந்த அயலான் திரைப்படத்தில் 4500க்கும் VFX SHOTகள் இடம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இந்த நுணுக்கமான VFX பணிகளுக்காகவே இவ்வளவு காலம் எடுத்துக் கொண்ட படக்குழு மிகவும் கவனத்தோடு பணியாற்றியுள்ளனர். இந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் டீசர் தற்போது வெளியானது. காத்திருந்தது என WORTH சொல்லும் அளவிற்கு மிகவும் பிரமிக்க வைக்கும் வகையில் படத்தின் VFX காட்சிகள் அனைத்தும் மிக சிறப்பாக இருப்பதாய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து இருக்கின்றனர். பெரிய திரையில் திரையரங்குகளில் காணும்போது அயலான் திரைப்படம் நிச்சயமாக இந்திய சினிமா கண்டிராத ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என இந்த டீசர் காட்டுகிறது. அட்டகாசமான அயலான் டீசர் இதோ...