BIGG BOSS 7 DAY 4: "அழகா மேக்கப் போட்ட பொண்ணுக்கு தான் பசங்க ஓட்டு போடுவாங்க"- அபத்தமான பிரதீப்க்கு பதிலடி கொடுத்த GIRLS!

BIGG BOSS 7 DAY 4 அபத்தமான பிரதீப்க்கு பதிலடி கொடுத்த GIRLS,Bigg boss tamil season 7 day 4 pradeep jovika maya about make up | Galatta

நேற்றைய எபிசோட் ஆரம்பமே “KNOW YOUR HOUSEMATES” டாஸ்க் யார் பிரபலம் என நிரூபிக்கும் மேடையில், கூல் சுரேஷ் - பூர்ணிமா ரவி இடையே யார் Verified? யார் Blocked? என்ற கலக்கலான விவாதத்துடனே தொடங்கியது.

thalapathy vijay in leo movie trailer highlight moments lokesh kanagarajபூர்ணிமா ரவி தான் எவ்வளவு பிரபலம் டிஜிட்டல் துறையில் தான் செய்தது என்ன என ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டிருக்க… “ஹாய் கைஸ் திஸ் இஸ் வெள்ளிக்கிழமை நாயகன், யூட்யூப் தளபதி இதெல்லாம் நானா எழுதிட்டது இல்ல மக்களாக கொடுத்த பட்டம்” என ஆரம்பித்த கூல் சுரேஷ், “நான் தமிழ்நாட்டுல மட்டும் ஃபேமஸ் இல்ல இந்தியால மட்டும் ஃபேமஸ் இல்ல வேர்ல்ட் ஸ்டார் வேர்ல்ட் ஃபுல்லா ஃபேமஸ்” என அதகளமாக ஆரம்பித்து அனைவரது கவனத்தையும் பெற்றதோடு டாஸ்கையும் வென்றார். 

ஆனால் அந்த இடத்தில் பூர்ணிமா ரவி -  விஷ்ணு இடையே நடந்த காரசாரமான விவாதம் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பற்ற தொடங்கியது. டாஸ்க் முடிந்து ஆட்டு மந்தை கதையெல்லாம் பேசிய கூல் சுரேஷ், பிக் பாஸ் என்டர்டைன்மெண்ட் ஷோ அல்ல ரியாலிட்டி ஷோ என ஏற்றுக்கொண்டார். ஆனால் டாஸ்க்கில் பற்றிய பூர்ணிமா ரவி - விஷ்ணு இடையிலானத் தீ வெளியில் பேசும்போது இன்னும் வெடித்தது. அந்த டாஸ்க் எப்படி விளையாட வேண்டும் என பூர்ணிமா ரவி தன்னுடைய ஒரு கருத்தை எடுத்து வைத்தார். அது கூல் சுரேஷ் உடன் விளையாடும் போது ஒத்துவரவில்லை. ஆனால் அதன் பிறகு விளையாடியவர்கள் எல்லோருமே பூர்ணிமாவில் சொன்னது போல் தான் விளையாடினார்கள் என பூர்ணிமா ரவி தான் பேசியதை நியாயப்படுத்தினார். 

இந்த முறை பிக் பாஸில் லக்சரி பட்ஜெட் வாங்கிய பிறகு பணம் செலுத்தும் முறையில் ஆட்டம் நகர்கிறது. அந்த வகையில் ஹவுஸ் மேட்ஸ் வாங்கிய கடன் தொகையில் 12 ஆயிரம் கழிக்க பிக் பாஸ் "வெயிட் காட்டுறோம்" என்ற டாஸ்கை கொடுக்கிறார். பிக் பாஸ் சொல்லும் எடையை எடை மேடையில் ஹவுஸ் மேட்ஸ் கூடி நின்று 'நிறுத்த' வேண்டும். ஒருவேளை இந்த டாஸ்க் தோற்றால் அனைவருடைய மேக்கப் சாதனங்களும் பறிக்கப்படும் என பிக் பாஸ் தெரிவித்தார்.

thalapathy vijay in leo movie trailer highlight moments lokesh kanagaraj

thalapathy vijay in leo movie trailer highlight moments lokesh kanagaraj

இதில் தோற்றாலும் பரவாயில்லை மேக்கப் பொருட்களை பறித்து விட்டால் பெண்களின் இயல்பான முகம் வெளியில் வரும் என தப்பு கணக்கு போடும் பிரதீப் அதற்கு கூட்டணிக்கு ஆள் சேர்க்க முயற்சித்தார்.  லக்சரி பட்ஜெட்டின் டாஸ்கை தோற்றாலும் பரவாயில்லை என விளையாட்டை ஆரம்பிக்க, கேப்டன் விஜய் வர்மா எல்லோரையும் சரியாக வழிநடத்தி டாஸ்கை வெற்றிகரமாக முடிக்க வைத்தார். 

ஆனால் பூர்ணிமா ரவி, ஜோவிகா, மாயா மற்றும் அக்ஷயா நால்வருக்கும் இந்த விஷயம் தெரிந்து விடவே நால்வரும், “மேக்கப் இல்லாமல் இருப்பது என்ன அவ்வளவு பெரிய காரியமா அதற்காக இந்த போட்டியையே தோற்கக்கூடிய நிலைக்கு அவர்கள் போவார்களா மேக்கப் இல்லாமல் இருந்து காட்டுவோம்” என புரட்சியில் இறங்கி, அவர்கள் போட்டுக் கொண்ட மேக்கப் கலைத்து விட முடிவு செய்து வாஷ் ரூம் ஏரியாவில் மேக்கப்பை கலைக்க தொடங்கினர்.

thalapathy vijay in leo movie trailer highlight moments lokesh kanagaraj

அதே சமயத்தில் கூல் சுரேஷ் - விஷ்ணு இருவரும் கேமரா முன்பு எதிர்பார்த்தது நடைபெறவில்லையே என புலம்பி கொண்டிருக்க அங்கே வந்த ஜோவிகா மேக்கப் குறித்து தன்னுடைய கருத்தை தரமாக எடுத்து வைத்தார். தொடர்ந்து அவர்கள் மேக்கப் குறித்து பேசிய விஷயங்கள் ஜோவிகாவிற்கு அவதூறாக பட நேராக பூர்ணிமா, மாயா, அக்ஷயாவிடம் வந்து, “நீங்கள் வேண்டுமானால் மேக்கப் போய் கலைத்துக் கொள்ளுங்கள் என்னால் மேக்கப் கலைக்க முடியாது அவர்கள் எப்படி அப்படி பேசலாம் நான் மேக்கப் போடு தான் இருப்பேன்” என மாஸ் காட்டினார். 

தொடர்ந்து மேக்கப் விவாதம் பெட்ரூமிலும் விஷ்ணு - பிரதீப் உடன் பூர்ணிமா ரவி - அக்ஷயா ஆகியோருடன் தொடர்ந்தது. பாத்ரூமில் அக்ஷயாவிடம் பேசிய பிரதீப் ஆண்டனி மிகவும் அற்பத்தனமாக, “நாமினேஷனில் ஒரு பெண் அழகா இருந்தா பசங்க ஓட்டு போடுவாங்க அது உனக்கு அட்வான்டேஜ் தான்” என வாதிட அக்ஷயா அதற்கு பதிலடி கொடுத்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் லக்சரி பட்ஜெட் கடன் தொகையை அடைக்கும் வகையில் பிக் பாஸ் கொடுத்த ஒரு கடினமான டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் தோல்வி அடைந்ததால் அவர்களது உடைகள் அனைத்தையும் பிக் பாஸ் பறித்துக் கொண்டார்.

மேக்கப் பற்றி பிரதீப் ஆண்டனியின் அபத்தமான கருத்து… மேக்கப் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாயா, ஜோவிகா, பூர்ணிமா ரவி & அக்ஷயா…  நிக்சன் பேசியது புரியாமல் அல்லது புரிந்தும் தான் பேசுவதே சரி நிற்கும் விசித்ரா… என நேற்று (அக்டோபர் 5) எபிசோடு கலந்தது இன்று என்ன நடக்கும் வெடிக்கும்... பார்க்கலாம்...