அருள்நிதி - பிரியா பவானி சங்கரின் மிரட்டலான டிமான்டி காலனி 2 உருவான விதம்... மிரள வைக்கும் மேக்கிங் வீடியோ இதோ!

அருள்நிதியின் டிமான்டி காலனி 2 பட மேக்கிங் வீடியோ வெளியீடு,arulnithi in demonte colony 2 movie making video out now | Galatta

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் மேக்கிங் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். தனக்கென தனி பாணியில் தொடர்ந்து வித்தியாசமான திரில்லர் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் அருள்நிதி. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டி ப்ளாக், தேஜாவு & டைரி என மூன்று வித்தியாசமான திரில்லர் திரைப்படங்களில் நடித்த நடிகர் அருள்நிதி நடிப்பில் இந்த 2023 ஆம் ஆண்டில் திருவின் குரல் மற்றும் கழுவெத்தி மூர்க்கன் ஆகிய அதிரடி திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றன. தொடர்ந்து அருள்நிதி நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் அடுத்ததாக அருள்நிதி நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் டிமான்டி காலனி 2. கடந்த 2015 ஆம் ஆண்டில் இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் முதல் படமாக வெளிவந்த திரைப்படமான டிமான்டி காலனி வித்தியாசமான ஹாரர் திரில்லர் படமாக ரசிகர்களின் பேராதரவு பெற்று வெற்றி பெற்றது. இயக்குனர் அஜய் ஞானமுத்துவிற்கு முதல் படத்திலேயே வெற்றியை தேடித்தந்த டிமான்டி காலனி திரைப்படம் நடிகர் அருள்நிதியின் திரைப் பயணத்தில் மிக முக்கிய படமாகும். இந்த டிமான்டி காலனி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிமான்டி காலனி 2 திரைப்படமும் தயாராகிறது. டிமான்டி காலனி திரைப்படத்தை தொடர்ந்து இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா என பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த இயக்குநர் அஜய் ஞானமுத்து அவர்களே ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 'டிமான்ட்டி காலனி 2' படத்தையும் இயக்குகிறார்.

டிமான்டி காலணி 2 படத்தின் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி பாண்டி கலை இயக்கத்தில், ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் 'டிமான்ட்டி காலனி 2' திரைப்படத்திற்கு டி. குமரேஷ் படத்தொகுப்பு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் படமான 'டிமான்ட்டி காலனி 2' திரைப்படத்தை ஒயிட் லைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் விஜய் சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி 61 நாட்களில் ஓசூர், சென்னை மற்றும் ஆந்திரா மாநில எல்லை ஆகிய இடங்களில் நடைபெற்று நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகளை படக்குழுவினர் தொடங்கியிருக்கிறார்கள். 

விரைவில் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த ஹாரர் திரில்லர் படங்களிலேயே குறிப்பிட்டு சொல்லும் வகையிலான மிரட்டலான ஹாரர் படமாக இருக்கும் வகையில் டிமான்டி காலனி திரைப்படத்தை படக்குழுவினர் உருவாக்கி இருக்கின்றனர். இந்நிலையில் டிமான்டி காலனி 2 திரைப்படம் உருவான விதத்தின் மேக்கிங் வீடியோவை பட குழு தற்போது வெளியிட்டுள்ளது. மிரள வைக்கும் டிமான்டி காலனி 2 படம் மேக்கிங் வீடியோ இதோ…
 

'விஜய் - வெங்கட் பிரபுவின் தளபதி 68 அரசியல் படமா?'- தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் தரமான பதில்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

'விஜய் - வெங்கட் பிரபுவின் தளபதி 68 அரசியல் படமா?'- தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் தரமான பதில்! ட்ரெண்டிங் வீடியோ

தனுஷின் D50 படத்தில் நடிக்கும் விக்ரம் பட நடிகர்?- ஸ்டேட்டஸில் புதுப்பேட்டை பாடல் வைத்து HINT... ருசிகர தகவல் உள்ளே!
சினிமா

தனுஷின் D50 படத்தில் நடிக்கும் விக்ரம் பட நடிகர்?- ஸ்டேட்டஸில் புதுப்பேட்டை பாடல் வைத்து HINT... ருசிகர தகவல் உள்ளே!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் செம்ம ஸ்டைலில் வந்த ஜெயிலர் பட முதல் பாடல்... ட்ரெண்டாகும் காவாலா லிரிக் வீடியோ இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் செம்ம ஸ்டைலில் வந்த ஜெயிலர் பட முதல் பாடல்... ட்ரெண்டாகும் காவாலா லிரிக் வீடியோ இதோ!