Vibe குறையாத ‘ஜெயிலர்’ காவாலா பாடல்.. இணையத்தை கலக்கும் தமன்னாவின் ரீல்ஸ்.. வைரல் வீடியோ உள்ளே..

காவாலா பாடலுக்கு அசத்தலான நடன வீடியோ வெளியிட்ட நடிகை தமன்னா வைரல் வீடியோ உள்ளே - Tamannaah Dance for jailer kaavaalaa song video goes viral | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா, தமிழில் கடந்த 2006 ல் வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து விஜய், அஜித், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து தமிழில் ரசிகர்களிடையே பிரபலமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தியிலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தற்போது பல படங்களில் நடித்து  பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார். இந்த ஆண்டு இந்தியில் தமன்னா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ‘ஜிகர்தா’ மற்றும் நெட்பிளிக்ஸ் ல் வெளியாகியுள்ள ‘லஸ்ட் ஸ்டோரி 2’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று தமன்னாவின் கவர்ச்சியான நடிப்பும் திரையுலகில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தற்போது தமன்னா தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் ‘போலா ஷங்கர்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதை தொடர்ந்து தமன்னா தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரண்மனை 4’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே நடிகை தமன்னா நடிப்பில் வெளியாகவிருக்கும் மிக முக்கியமான திரைப்படம் ‘ஜெயிலர்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் தமன்னா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொலாமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் மலையாள நடிகர் மோகன் லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரப், கன்னட நடிகர் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் இவர்களுடன் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ஆடுகளம் கிஷோர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள ஜெயிலர் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பின் மத்தியில் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள முதல் பாடலான ‘காவாலானா’ பாடல் வெளியானது. படத்தில் தமன்னாவிற்காக உருவான இப்பாடலில் சில காட்சிகளுடன் லிரிக்கல் வீடியோ வெளியாகி தற்போது 20 மில்லியன் பாரவையாளர்களை கடந்து இணையத்தில் டிரெண்ட்டிங்கில் இருந்து வருகிறது.

அனிருத் இசையில் இயக்குனரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் எழுதிய இப்பாடலை ஷில்பா ராவ் பாடியுள்ளார். அட்டகாசமான வைப் பாடலாக வெளியாகியுள்ள காவாலா பாடலுக்கு ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவினை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவாலா பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இதையடுத்து தமன்னாவின் துள்ளலான நடனத்துடன் வெளியான வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.  

 

If you aren’t already Hooked yet, here’s the Hookstep of #Kaavaalaa @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @tamannaahspeaks @Arunrajakamaraj @shilparao11 @AlwaysJani #Jailer #JailerFirstSingle pic.twitter.com/EvDxgYKdUw

— Sun Pictures (@sunpictures) July 8, 2023

“கைகூப்பி மன்னிப்பு கோருகிறேன்..” பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ விமர்சனங்களின் எதிரொலி.. மன்னிப்பு கேட்ட வசனகர்த்தா..!
சினிமா

“கைகூப்பி மன்னிப்பு கோருகிறேன்..” பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ விமர்சனங்களின் எதிரொலி.. மன்னிப்பு கேட்ட வசனகர்த்தா..!

இரண்டாவது வாரத்திலும் பட்டையை கிளப்பும் மாரி செல்வராஜின் மாமன்னன்..! வைரலாகும் படக்குழுவினரின் அறிவிப்பு..
சினிமா

இரண்டாவது வாரத்திலும் பட்டையை கிளப்பும் மாரி செல்வராஜின் மாமன்னன்..! வைரலாகும் படக்குழுவினரின் அறிவிப்பு..

“சென்சார் போனால் தான் தெரியும்..” தளபதி விஜயின் லியோ படம் குறித்து பிரபல நடிகர் எஸ்வி சேகர்.. - Exclusive Interview உள்ளே..
சினிமா

“சென்சார் போனால் தான் தெரியும்..” தளபதி விஜயின் லியோ படம் குறித்து பிரபல நடிகர் எஸ்வி சேகர்.. - Exclusive Interview உள்ளே..