'ரஜினி சார் போன்ல பேசினதும் குதிச்சிடே இருந்தேன்'- சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் பட காவாலா பாடல் பாடிய ஷில்பா ராவின் ஸ்பெஷல் பேட்டி இதோ!

ஜெயிலர் பட காவாலா பாடல் பாடிய ஷில்பா ராவின் ஸ்பெஷல் பேட்டி,rajinikanth in jailer movie kaavaalaa song singer shilpa rao interview | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலாக நேற்று ஜூலை 6ஆம் தேதி வெளிவந்த காவலா பாடலை பாடிய பாடகி ஷில்பா ராவ் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். என்றென்றும் மக்களின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவர்களின் படங்கள் வெளியாகும் சமயங்களில் திரையரங்குகள் அனைத்தும் திருவிழா கோலம் கொள்ளும். 45 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வயதில் தனது 70களில் பயணிக்கும் போதும் மக்களை ஈர்க்கும் அந்த காந்த சக்தி கொஞ்சமும் குறையவில்லை. அவரது படங்களின் வியாபாரமும் அப்படித்தான் இருக்கிறது. அடுத்ததாக தனது திரை பயணத்தில் 170 ஆவது படமாக ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 120 திரைப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் அவர்கள் இயக்குகிறார். முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் படமாக தயாராகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இதனிடையே ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர். கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் என தனக்கே உரித்தான பாணியில் அதிரடியான டார்க் காமெடி ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் முதல் முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த ஜெயிலர் திரைப்படத்தில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்யும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அதற்கான இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் நேற்று வெளியாகி வைரல் ஹிட்டாகியுள்ளது. இயக்குனர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட அருண் ராஜா காமராஜ் எழுதிய இந்த காவாலா பாடலை பாடகி ஷில்பா ராவ் பாடி இருக்கிறார். இந்நிலையில் இந்த பாடலில் பணியாற்றியது குறித்து நடிகை ஷில்பா ராவ் தற்போது பிரத்யேக பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் பேசியபோது “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் படம் என சொன்ன உடனே வேறு எதுவும் கேட்காமல் ஓகே சொல்லி விட்டேன்” என சொல்லி பேச தொடங்கிய ஷில்பா ராவ், “பாடல் பதிவு செய்யும்போதே நானும் அனிருத்தும் குதித்துக் கொண்டும் நடனமாடிக் கொண்டும் தான் ஜாலியாக பதிவு செய்தோம்” என்று தெரிவித்தார். அதே போல் தொலைபேசியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அழைத்து பேசிய போது, அவர் பேசியதுமே ரா ரா ரா என பாடலில் வருவது போல குதிக்க தொடங்கி விட்டதாக பாடகி ஷில்பா ராவ் தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட பாடகி ஷில்பா ராவின் ஜெயிலர் பிரத்யேக பேட்டி இதோ…
 

தனுஷின் D50 படத்தில் நடிக்கும் விக்ரம் பட நடிகர்?- ஸ்டேட்டஸில் புதுப்பேட்டை பாடல் வைத்து HINT... ருசிகர தகவல் உள்ளே!
சினிமா

தனுஷின் D50 படத்தில் நடிக்கும் விக்ரம் பட நடிகர்?- ஸ்டேட்டஸில் புதுப்பேட்டை பாடல் வைத்து HINT... ருசிகர தகவல் உள்ளே!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் செம்ம ஸ்டைலில் வந்த ஜெயிலர் பட முதல் பாடல்... ட்ரெண்டாகும் காவாலா லிரிக் வீடியோ இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் செம்ம ஸ்டைலில் வந்த ஜெயிலர் பட முதல் பாடல்... ட்ரெண்டாகும் காவாலா லிரிக் வீடியோ இதோ!

அஜித் குமார் - மகிழ் திருமேனி அதிரடி காம்போவின் விடாமுயற்சி பட ஷூட்டிங் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்! வைரல் வீடியோ
சினிமா

அஜித் குமார் - மகிழ் திருமேனி அதிரடி காம்போவின் விடாமுயற்சி பட ஷூட்டிங் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்! வைரல் வீடியோ