சிவகார்த்திகேயன் ரசிகர்களின் வாழ்த்து மழையில் ஆராதனா !
By Aravind Selvam | Galatta | October 22, 2020 13:08 PM IST

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே கொரோனவால் பாதிக்கப்பட்டுளள்து.
படங்களில் நடிப்பது மட்டுமின்றி கனா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் இருந்துள்ளார்.இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள வாழ் திரைப்படம் கொரோனா பாதிப்பு சரியான பின் வெளியாகும் என்று தெரிகிறது.இதனை தவிர சில பாடல்களுக்கு படலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன்.
கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் பலரும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.சிவகார்த்திகேயன் ட்விட்டரிலும்,இன்ஸ்டாகிராமிலும் அவ்வப்போது ஆக்டிவ் ஆக இருப்பவர்.சினிமாவை தாண்டி தனக்காக ரசிகர்கள் எடுக்கும் சின்ன சின்ன முயற்சிகளான வித்தியாசமான வீடியோக்கள்,புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பகிர்வார்.அதோடு தன்னை சுற்றி நடக்கும் சமூகப்பிரச்னைகளுக்கும் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் பதிவிடுவார்.ரசிகர்களின் திறமைகளையும் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் அவர் பகிர்ந்து பாராட்டுவார்.
இவரது டாக்டர் படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.கொரோனாவால் நிறுத்தப்பட்ட டாக்டர் படத்தின் ஷூட்டிங்கும் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்று இவரது மகள் ஆராதனாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல ரசிகர்களும்,பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக ஆராதனா சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தற்போது ரசிகர் ஒருவர் சிவகார்த்திகேயன் மற்றும் ஆராதனா இருவரின் செம கியூட்டான வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
Wishing A very Happy Birthday to our Little Princess, #AaradhanaSK 🎂💐
— Vinnavan Sk (@vinnavansk) October 22, 2020
😍Sk - Aaradhana Combo Cutz✨️
🎊Hope You All Like This🎉 #HBDAaradhanaSK !!❤ @Siva_Kartikeyan !! pic.twitter.com/OCHQgFj4LS
Bigg Boss 4 Tamil Latest New Promo | Housemates debate task | Ramya Pandian
22/10/2020 12:16 PM
Tulu actor, rowdy-sheeter Surendra Bantwal found dead in his house in Karnataka
22/10/2020 11:54 AM
Rajamouli's RRR - New Mass Action Packed Teaser | Jr NTR | Ram Charan
22/10/2020 11:43 AM
OFFICIAL: Jiiva's next is a rom-com, Super Good Films' 91st production venture
22/10/2020 10:51 AM