தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களுமே ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி கனா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் இருந்துள்ளார்.இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள வாழ் திரைப்படம் கொரோனா பாதிப்பு சரியான பின் வெளியாகும் என்று தெரிகிறது.இதனை தவிர சில பாடல்களுக்கு படலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார் சிவகார்த்திகேயன்.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி இயக்கத்தில் உருவாகும் டான் படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.தற்போது இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் ரசிகர்களை பெற்று அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.