ஜார்ஜியாவில் அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது டிவி நேரலையில் பூனை குறுக்கிட்ட  நிகழ்வு அரங்கேறியுள்ளது.

cat

ஜார்ஜியா அரசியல் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு  முன்னர் அந்நாட்டின் பிரபல டிவி-யில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி டிவி-யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய இரு கண்டங்களை பிரிக்கும் மையப்பகுதியில் அமைந்த நாடாக ஜார்ஜியா உள்ளது. இந்நாட்டின் தலைநகர் திபிலிசியாகும். அதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்காணோர் இந்த நேரடி விவாத நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தனர். 

இந்நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜார்ஜியா அரசியல் குறித்து அரசியல்வாதி ஒருவரிடம் நிகழ்ச்சி அரங்கில் விவாதம் நடத்திக்கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென விவாத மேடை மீது பூனை ஒன்று தாவி அமர்ந்தது. இதனால், சற்று அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் உடனடியாக சுதாரித்துக்கொண்டு இது எங்கள் செல்லப்பிராணி பூனை ககுஷ்சா. இவர் நமது விவாதத்தில் கலந்துகொள்ளமாலா? என்று விவாத பங்கேற்பாளரிடம் கேட்டார். மேலும், ககுஷ்சா மிகவும் நல்ல செல்லப்பிராணி, ஆனால், நாம் மீண்டும் விவாதத்திற்கு திரும்பவேண்டும் என நினைக்கிறேன் என்றும் கூறினார். 

மேலும் ககுஷ்சா நீ தயவு செய்து கிழே இறங்கு என்றார் அவர். அப்போது விவாத நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறதா என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசியல்வாதி கேட்டார். அதற்கு ஆம் நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது ஆனாலும் பரவாயில்லை என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் பதிலளித்தார். 

அதனைத்தொடர்ந்து இது ஒருபுறமிருக்க செல்லபிராணி பூனை விவாத மேடையின் மையப்பகுதியில் சிறிது நேரம் அமர்ந்திருந்தது. பின்னர் சில விநாடிகளுக்கு பின்னர் விவாத மேடையில் இருந்து பூனை ககுஷ்சா இறங்கி சென்றது. இதனை தொடர்ந்து விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. டிவி நேரலை விவாத நிகழ்ச்சியின் போது பூனை குறுக்கிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.