தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து வரலக்ஷ்மி சரத்குமார்.. Fans Meet ல் கோவப்பட்ட சம்பவம் – வைரலாகும் வீடியோ இதோ..

தனுஷ் குடும்பம் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த வரலக்ஷ்மி சரத்குமார் - Varalakshmi Sarathkumar about Dhanush and his family bonding | Galatta

தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான இளம் நடிகைகளில் ஒருவர்  வரலக்ஷ்மி சரத்குமார். போடா போடி திரைப்படத்தில் அறிமுகமாகி இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கொன்றால் பாவம்’ மற்றும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது வரலக்ஷ்மி சரத்குமார் ‘பிறந்தாள் பராசக்தி’ , ‘பாம்பன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நமது கலாட்டா ஏற்பாடு செய்திருந்த ரசிகர் சந்திப்பு கூட்டத்திற்கு வருகை தனது ரசிகர்களை சந்தித்து மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது நடிகர் தனுஷ் உடனான நட்புறவு குறித்து வரலக்ஷ்மி கூறியது, "லாக்டவுன் ல எனக்கும் தனுஷுக்கும் ஒரு நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளது. பிரபு தேவா மாஸ்டர், தனுஷ் , ஐஸ்வர்யா, கிருஷ்ணா எல்லோரும் பேட்மிண்டன் விளையாடுவோம். அப்போது தான் எனக்கும் தனுஷூக்கும் அவரது குடும்பம் அவரது மகன்கள் லிங்கா யாத்ரா எல்லோருக்கூடவும் ஒரு நல்ல பிணைப்பு உருவானது." என்றார். மேலும் மாரி படம் குறித்து, "அது சினிமாவில் என்னுடைய ஆரம்பகாலம், அதுல ஒரு காட்சியில் கண்ணீர் ததும்ப ஒரு காட்சியில் நடித்தார். நான் பின்பற்றும் சிறந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். ஆரம்பத்தில் அவரது நடிப்பு எனக்கு பெரிதும் உதவியது. இன்று வரை அந்த காட்சியும் என் நினைவில் உள்ளது."  என்றார்.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கிய விஷயம் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் பிரிவு. இது குறித்து ஒரு நண்பராய் உங்கள் கருது என்ன? என்று கேட்கையில் அவர்,  "அவர்களுடைய தனிப்பட்ட முடிவை நான் மதிக்கிறேன். அது தான் அவர்களுக்கு சந்தோஷம் என்றால் அது நல்லது தான். அது பற்றி கருத்து சொல்ல நாம் யார்? அதில் கருத்து சொல்லவும் முடியாது.. அவங்க வாழ்க்கையில் நாம் யாரு? ஒரு நட்சத்திரம் கிட்ட பேசும்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கேட்காதீர்.. அதை பற்றி கேட்க நீங்கள் யார்? அவரை நேசியுங்கள்..‌ அதோடு விட்டுவிடுங்கள்.. அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கருத்து சொல்வது வேண்டாம்." என்றார் வரலக்ஷ்மி சரத்குமார்.

மேலும் தனுஷ் மகன்கள் குறித்து  "யாத்ரா அப்படியே அவங்க அப்பா மாதிரியே இருக்கான். யாத்ராவும் லிங்காவும் அருமையான பிள்ளைகள். அவர்கள் இப்போது வளர்ந்து விட்டார்கள். நான் அவர்களுடன் பேட்மிட்டன் விளையாடிருக்கிறேன். ஐ.பி.எல் விளையாட்டின் போது மஞ்சள் டீ ஷர்ட் போட்டு கொண்டு அவர் வீட்டில் தான் பார்ப்போம்." என்றார்.

வரலக்ஷ்மி சரத்குமார் பகிர்ந்து கொண்ட அட்டகாசமான பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோ இதோ..

சிவகார்த்திகேயனின் மாஸான
சினிமா

சிவகார்த்திகேயனின் மாஸான "மாவீரன்" பட டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய முன்னணி OTT நிறுவனம்! அட்டகாசமான அறிவிப்பு இதோ

மகளிர் தினத்தையொட்டி அனுஷ்கா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் Surprise Glimpse.. ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

மகளிர் தினத்தையொட்டி அனுஷ்கா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் Surprise Glimpse.. ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

கமல் ஹாசன் தயாரிக்கும் அடுத்த பெரிய திரைப்படம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான வீடியோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..
சினிமா

கமல் ஹாசன் தயாரிக்கும் அடுத்த பெரிய திரைப்படம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான வீடியோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..