நானி நடிக்கும் ‘தசரா’ படத்தின் டிரைலர் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - படக்குழு வெளியிட்ட வெறித்தனமான glimpse இதோ..

நானி நடிக்கும் 'தசரா' படத்தின் டிரைலர் அப்டேட் - Actor Nani Dasara Trailer Update | Galatta

தென்னிந்தியாவிலிருந்து வெளியாகவிருக்கும் அடுத்த பான் இந்திய திரைப்படம் ‘தசரா’. நிலக்கரி சுரங்கம் சார்ந்த கதையில்  பிரபல தெலுங்கு நடிகர் நானி வித்யாசமான தோற்றத்தில் நடிக்கும் இப்படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்து ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அட்டகாசமான அதிரடி திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடில்லா இயக்கும் தசரா திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் மார்ச் மாதம் 30 ம் தேதி உலகெங்கிலும் வெளியாகவுள்ளது, மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் நானியுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி,சாய் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரது இசையில் முன்னதாக வெளியான தசாரா பாடல்கள் அனைத்து மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் 'மாநகரம்' 'கைதி', 'மாஸ்டர்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள சத்யன் சூர்யன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்

நாளுக்கு நாள் புது புது அப்டேட்டுகளுடன் ரசிகர்களை கொண்டாட வைக்கும் தசரா படக்குழுவினர் தற்போது படத்தின் டிரைலர் குறித்த அப்டேட்டை அட்டகாசமான  போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. அதன்படி தசரா படத்தின்  டிரைலர் வரும் மார்ச் மாதம் 14 ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த அப்டேட்டினை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

#DasaraTrailer on
14th March 2023 ❤️‍🔥

It is going to be a MASS EXPLOSION 💥🔥

Stay tuned for more details 🔥#DasaraOnMarch30th

Natural Star @NameisNani @KeerthyOfficial @Dheekshiths @odela_srikanth @Music_Santhosh @saregamasouth pic.twitter.com/swdcANwLnI

— SLV Cinemas (@SLVCinemasOffl) March 11, 2023

நடிகர் நானி தெலுங்கு திரையில் பல படங்கள் நடித்து வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் அவரது தெலுங்கு திரைப்படங்களை மற்ற மொழியில் டப் செய்தாலும் மெகா ஹிட் அடித்த நிகழ்வுகளும் உள்ளது, அதன்படி 'நான் ஈ', 'கேங் லீடர்', 'அடடே சுந்தரா', 'ஷ்யாம் சிங்கா ராய்', 'ஜெர்ஸி' மற்றும் பல படங்கள் தமிழில் பல ரசிகர்களை நானிக்கு  பெற்று கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது. நிச்சயம் தசரா திரைப்படமும் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

‘அசுரன்’ சிவசாமி கெட்டப்பில் ‘அட்டகத்தி’ தினேஷ் – வைரலாகும் பா ரஞ்சித் தயாரிக்கும் தண்டகாரண்யம் படத்தின் Glimpse இதோ..
சினிமா

‘அசுரன்’ சிவசாமி கெட்டப்பில் ‘அட்டகத்தி’ தினேஷ் – வைரலாகும் பா ரஞ்சித் தயாரிக்கும் தண்டகாரண்யம் படத்தின் Glimpse இதோ..

'பிச்சைக்காரன் 2' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் புதிய படம் ரிலீஸ் தேதி அப்டேட்.. - வைரலாகும் அட்டகாசமான போஸ்டர் இதோ..
சினிமா

'பிச்சைக்காரன் 2' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் புதிய படம் ரிலீஸ் தேதி அப்டேட்.. - வைரலாகும் அட்டகாசமான போஸ்டர் இதோ..

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பில் ‘சூரரைப் போற்று’ இயக்குனர் சுதா கொங்கரா.. வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பில் ‘சூரரைப் போற்று’ இயக்குனர் சுதா கொங்கரா.. வைரலாகும் புகைப்படங்கள் இதோ..