சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் 'கொட்டுக்காளி' படத்தின் சர்ப்ரைஸ் வீடியோ.. – ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த Glimpse இதோ..

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் கொட்டுக்காளி படத்தின் முதல் பார்வை – Soori Upcoming Kottukkaali film First look tease viral | Galatta

நடிகர்கள் நடிப்பதில் இருந்து வேறு ஒரு பரிணாமத்திற்கு பயணித்து அதில் வெற்றி பெறுவது கடினமான விஷயம் அதுவும் குறிப்பாக தயாரிப்பாளராக திரைதுறையில் கவனம் பெறுவது மிக கடினம். அதில் வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் கவனம் பெரும் சிலரில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தன் திறமையினாலும் கடின உழைப்பினாலும் சிவகார்த்திகேயன் தற்போது உச்ச நட்சத்திரங்கள் பட்டியலில் உள்ளார். நடிப்பது மட்டுமல்லாமல் பாடகராகவும் பாடலாசிரியராகவும் மக்கள் மத்தியில் கவனம் பெற்ற சிவகார்த்திகேயன். இதில் மட்டுமல்லாமல் தயாரிப்பளராக SK தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரில் ‘கனா’ படத்தின் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கவனம்  பெற்றார். மற்றும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’  படத்தை தயாரித்தார். மேலும் இதனை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான டாக்டர் படத்தை  சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்தார். மிகப்பெரிய வெற்றியை பெற்று பாக்ஸ் ஆபிஸ் அடித்தது. அவரது அடுத்த படமான ‘டான்’ படத்தையும் நடித்து தயாரித்தார். முந்தைய படங்களை விட மிகப்பெரிய வெற்றியை டான் திரைப்படம் பெற்றது.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கவனம் பெரும் கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் சிவகர்த்திகேயன் தற்போது புதிதாய தயாரிக்கவிருக்கும் திரைபபடம் ‘கொட்டுக்காளி’.  பிரபல நகைச்சுவை நடிகரான சூரி ‘விடுதலை’ படத்தில் கதாநயாகனாக அறிமுகமாகி வெளிவரவிருக்கும் நிலையில் மீண்டும் சிவ கார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்திலும் ஹீரோவாகிறார். இவருடன் இணைந்து பிரபல மலையாள திரைப்படமான ‘ஹெலன்’, ‘கும்பலாங்கி நைட்’, ‘கப்பெல்லா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த பிரபல மலையாள நடிகை ஆனா பென் நடிக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயனின் SK தயாரிப்பு நிறுவனத்துடன் தயாரிப்பாளர் கலை அரசு அவர்கள் இணைந்து  தயாரிக்கவுள்ள கொட்டுக்காளி படத்தை உலகநாடுகளில் இன்னமும் விருதுகளை குவித்து வெளிவராத கூழாங்கல் திரைப்படத்தின் இயக்குனர் PS.வினோத் ராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது மேலும் சேவல்கள் நிறைந்த வித்யாசமான முதல் பார்வை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இந்நிலையில் படத்தின் முதல் பார்வை காட்சியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலே அதிகளவு பார்வையாளர்களை ஈர்த்து பேசு பொருளாக மாறியுள்ளது கொட்டுக்காளி திரைப்படம். தற்போது ரசிகர்களால் வைரலாகி வரும் கொட்டுக்காளி முன்னோட்ட பார்வை இதோ..

கமல் ஹாசன் தயாரிக்கும் அடுத்த பெரிய திரைப்படம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான வீடியோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..
சினிமா

கமல் ஹாசன் தயாரிக்கும் அடுத்த பெரிய திரைப்படம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான வீடியோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..

கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான Glimpse.. வைரலாகி வரும் பதிவு இதோ..
சினிமா

கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான Glimpse.. வைரலாகி வரும் பதிவு இதோ..

விஷால் - SJசூர்யாவின் மாஸ் கேங்ஸ்டர் மார்க் ஆண்டனி... செல்வராகவனின் பிறந்தநாள் பரிசாக வந்த மிரட்டலான GLIMPSE இதோ!
சினிமா

விஷால் - SJசூர்யாவின் மாஸ் கேங்ஸ்டர் மார்க் ஆண்டனி... செல்வராகவனின் பிறந்தநாள் பரிசாக வந்த மிரட்டலான GLIMPSE இதோ!