இந்திய கிரிக்கெட் அணி சாம்ராஜ்யத்தின் தொடக்கமாகவும் மாபெரும் சாதனையாகவும் அமைந்த நிகழ்வு 1983ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை. இந்த மூன்றாவது உலக கோப்பை போட்டியில் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கான முதல் உலகக் கோப்பையை கைப்பற்றியது.

1983 உலகக்கோப்பை நிகழ்வை மையப்படுத்திய பயோபிக் படமாக பாலிவுட்டில் 83 திரைப்படம் தயாராகியுள்ளது. ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 83 படத்தை இயக்குநர் கபீர் கான் இயக்கியுள்ளார். அஸ்வின் மிஸ்ரா ஒளிப்பதிவில், ப்ரீதம் மற்றும் ஜூலியஸ் பக்கியம் இசையமைத்துள்ளனர்.

83 படத்தில் கபில்தேவ்-ஆக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க, கபில் தேவின் மனைவி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான ஜீவா, தமிழகத்தை சார்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற டிசம்பர் 24ஆம் தேதி உலகெங்கும் பல மொழிகளிலும் 83 படம் ரிலீசாகிறது. தமிழில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் Y NOT ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் 83 படத்தின் அசத்தலான ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரெய்லர் இதோ..