RRR நாயகன் JrNTRன் அடுத்த பிரம்மாண்ட படைப்பில் கைகோர்த்த முன்னணி பாலிவுட் நடிகர்... NTR30 பட மாஸான அறிவிப்பு இதோ!

JrNTRன் NTR30 படத்தில் சைஃப் அலி கான் இணைந்தார்,saif ali khan joins with jrntr in ntr30 movie koratala siva | Galatta

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் RRR. பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்து வெளிவந்த RRR திரைப்படம் உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியில் பல சாதனைகள் படைத்தது. உலகம் முழுக்க ரசிகர்களின் மனம் கவர்ந்த RRR திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் வேற லெவல் வைரல் ஹிட் ஆனது. மேலும் ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் ஆகிய விருதுகளும் RRR திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இமாலய வெற்றி பெற்ற RRR திரைப்படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்  வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தனது திரைப் பயணத்தில் 30-வது திரைப்படமாக தயாராகும் NTR30  திரைப்படத்தில் அடுத்து ஜூனியர் என்டிஆர் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.  தெலுங்கு சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவரான கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் இத்திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளிவந்த நிலையில், தொடர்ந்து திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. பாலிவுட் சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகியாக வலம் வரும் நடிகை ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து NTR30 திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் நந்தாமுரி கல்யாண் ராம் இது திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். 

இந்நிலையில் NTR30 திரைப்படத்தில் முன்னணி பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் இணைந்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்தி சினிமாவின் நட்சத்திர நடிகரான சைஃப் அலிகான், நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராவணனாக மிரட்டி இருக்கும் நிலையில், NTR30 படத்திலும் மிரட்டலான வில்லனாக நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட NTR30 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சைஃப் அலிகான் இன்று ஏப்ரல்18ம் தேதி நடிகர் ஜூனியர் என்டிஆர் உடன் NTR30 படப்பிடிப்பில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் அடுத்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஜூனியர் என்டிஆர் உடன் NTR30 திரைப்படத்தில் சைஃப் அலிகான் படப்பிடிப்பில் இணைந்த புகைப்படங்கள் இதோ…
 

Team #NTR30 welcomes #SaifAliKhan on board ❤‍🔥

The National Award winning actor joined the shoot of the high voltage action drama. @tarak9999 #JanhviKapoor #KoratalaSiva @NANDAMURIKALYAN @anirudhofficial @YuvasudhaArts pic.twitter.com/RB6s2Xh45g

— NTR Arts (@NTRArtsOfficial) April 18, 2023

சென்னை முதல் மும்பை வரை.. தொடங்கும் சோழர்களின் பயணம்.. – பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ இதோ..
சினிமா

சென்னை முதல் மும்பை வரை.. தொடங்கும் சோழர்களின் பயணம்.. – பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ இதோ..

இறுதிச்சுற்று கூட்டணி.. மாதவனுக்கு அட்டகாசமாக விருந்தளித்த சுதா கொங்கரா.. – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

இறுதிச்சுற்று கூட்டணி.. மாதவனுக்கு அட்டகாசமாக விருந்தளித்த சுதா கொங்கரா.. – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

தளபதி விஜயின் லியோ படத்தில் இணையும் பிரபல நடிகர்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் அட்டகாசமான தகவல் இதோ..
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்தில் இணையும் பிரபல நடிகர்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் அட்டகாசமான தகவல் இதோ..