மிட் நைட் பிரியாணி சாப்பிடுவோம்... ஹாரிஸ் ஜெயராஜ் உடனான வாழ்க்கை பயணத்தின் சுவாரஸ்யங்களை பகிர்ந்த சுமா ஹாரிஸ்! வைரல் வீடியோ

ஹாரிஸ் ஜெயராஜ் உடனான வாழ்க்கை பயணத்தின் சுவாரஸ்யங்களை பகிர்ந்த சுமா ஹாரிஸ்,suma harris opens about her mid night biryani with harris jayaraj | Galatta

தமிழ் சினிமா ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரட் இசையமைப்பாளராக எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். மின்னலே திரைப்படத்திலிருந்து தனது பயணத்தை தொடங்கிய ஹாரிஸ் ஜெயராஜ் இன்றுவரை இடைவிடாத தனது இசை விருந்தை வழங்கி வருகிறார். கடைசியாக தி லெஜன்ட் படத்திற்கு இசையமைத்த ஹரிஷ் ஜெயராஜ் அடுத்ததாக ஜெயம் ரவியின் திரை பயணத்தில் 30 வது திரைப்படமாக தயாராகும் புதிய படத்திற்கு இசையமைக்கிறார்.

இதனிடையே ஹரிஷ் ஜெயராஜ் அவர்களின் மனைவி சுமா ஹாரிஸ் நமது கலாட்டா ரிட்ஸ் பிரத்தியேக பேட்டியில் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவரிடம் திருமணத்திற்கு பிறகு முதல் முறை ஜோடியாக நீங்கள் வெளியில் சென்றது எங்கே? என கேட்டபோது, "நான் சுத்த சைவ பிரியர்... நான் முட்டை கூட சாப்பிட மாட்டேன். ஆனால் அவர் சுத்த அசைவ பிரியர்... நாங்கள் டின்னர் சாப்பிட வெளியில் சென்றோம். சென்னையில் அவருக்குத் தெரிந்த ஒரே சைவ உணவகம் என்றால் அது சரவண பவன் தான். எனவே என்னை சரவணபவனுக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு தோசை சாப்பிடுவதே போதும் என இருந்தது. எனவே அவர் ஒரு நெய் தோசை ஆர்டர் செய்துவிட்டு உனக்கு என்ன வேண்டுமோ சாப்பிட்டுக் கொள் என சொல்லி விடுவார்."  தொடர்ந்து, "உங்களது முதல் வெளிநாட்டு பயணம் எது? என கேட்டபோது, "சிங்கப்பூர்" என பதில் அளித்த சுமா ஹாரிஸ் அவர்களிடம், "உங்களுடைய முதல் சண்டை எது?" எனக் கேட்டபோது, நாங்களும் எல்லா ஜோடிகள் போல நிறைய விஷயங்களுக்காக விவாதம் செய்வோம். ஆனால் அது அடுத்த ஓரிரு மணி நேரங்களுக்குள் முடிவடைந்து விடும்." என்றார். யார் முதலில் மன்னிப்பு கேட்பார் என கேட்டதற்கு, "மன்னிப்பு கேட்க மாட்டோம் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்… தேவை இல்லையே ஏன் அப்படியே தொடர்ச்சியாக பேச வேண்டியதுதானே" என பதிலளித்தார். அடுத்ததாக "உங்களுடைய முதல் பிரசவம் எப்படி இருந்தது?" என கேட்டபோது, "எனக்கு மோசமான பிரசவம் இல்லை, என்னை பார்த்த பலரும் சொல்வார்கள்… நான் பார்ப்பதற்கு கர்ப்பமாக இருப்பது போலவே தெரியாது. நான் அந்த சமயங்களிலும் மிகவும் ஆக்டிவாக தான் இருந்தேன். நான் வேகமாக நடக்கும் போது மற்றவர்கள் தான் சொல்வார்கள் அம்மா கண்ணு படும்மா கொஞ்சம் நிதானமாக என்பார்கள்" என சுமா ஹாரிஸ் பதில் அளித்தார். மேலும் அவரிடம் கர்ப்ப காலத்தில் உங்களுக்கு உணவின் மீதான ஆசைகள் இருந்ததா? எனக் கேட்டபோது, "ஆமாம் இருந்தது இவர் இரவில் பணியாற்றும் ஒரு நபர் என்பதால், நானும் இரவில் அந்த ஆசைகளை தீர்த்துக் கொள்வேன். அவர் என்னை இரவில் வெளியில் அழைத்துச் செல்வார். நாங்கள் கிரவுண் பிளாசாவிற்கு செல்வோம். அல்லது மிட் நைட் பிரியாணி சாப்பிடுவோம்…" என பதிலளித்தார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமா ஹாரிஸின் இந்த பிரத்தியேக பேட்டி இதோ…
 

இறுதிச்சுற்று கூட்டணி.. மாதவனுக்கு அட்டகாசமாக விருந்தளித்த சுதா கொங்கரா.. – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

இறுதிச்சுற்று கூட்டணி.. மாதவனுக்கு அட்டகாசமாக விருந்தளித்த சுதா கொங்கரா.. – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

தளபதி விஜயின் லியோ படத்தில் இணையும் பிரபல நடிகர்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் அட்டகாசமான தகவல் இதோ..
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்தில் இணையும் பிரபல நடிகர்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் அட்டகாசமான தகவல் இதோ..

'சூர்யா ரசிகர்களே தயாரா?'- பிரம்மாண்டமான சூர்யா 42 பட டைட்டில் அறிவிப்பு தேதியை அதிரடியாக வெளியிட்ட படக்குழு! மிரட்டலான புது GLIMPSE இதோ
சினிமா

'சூர்யா ரசிகர்களே தயாரா?'- பிரம்மாண்டமான சூர்யா 42 பட டைட்டில் அறிவிப்பு தேதியை அதிரடியாக வெளியிட்ட படக்குழு! மிரட்டலான புது GLIMPSE இதோ