"அமைதியா HARD WORK பண்ணுங்க RESULT சத்தம் போடட்டும்!"- சிலம்பரசன்TRன் லேட்டஸ்ட் மாஸ் பதிவால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

சிலம்பரசன்TRன் லேட்டஸ்ட் மாஸ் பதிவால் உற்சாகத்தில் ரசிகர்கள்,silambarasan tr latest post about his hard work on workouts | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கினார். அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவந்த மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸை வெற்றியோடு தொடங்கி இருக்கும் சிலம்பரசன்.TR தனது அடுத்தடுத்த திரைப்படங்களை மிகவும் முனைப்போடு தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - நடிகர் சிலம்பரசன்.TR - இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றிக் கூட்டணியில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை வேல் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்கள் தயாரித்திருந்தார். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கதையில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் வழக்கமான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு புதிய வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. முன்பே படக்குழு அறிவித்தபடி வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் விரைவில் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை திரைப்படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்துள்ள திரைப்படம் பத்து தல. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்து தல திரைப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த பத்து தல திரைப்படத்தின் நம்ம சத்தம் பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் எனவும் ட்ரெய்லர் வெளியாகும் எனவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

வருகிற மார்ச் 30 ஆம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக பருமான உடல் தோற்றத்திலிருந்து தன்னை கட்டுக்கோப்பான உடலுக்கு கடினமான உடல் பயிற்சிகள் மூலம் தன்னைத்தானே செதுக்கிய சிலம்பரசன்.TR தனது ரசிகர்கள் அனைவருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் தொடர்சியாக தனது உடற்பயிற்சியை இடைவிடாது செய்த குறிப்புகளை தனது சமூக வலைதள பக்கங்களில் சிலம்பரசன்.TR வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் "அமைதியா HARD WORK பண்ணுங்க RESULT சத்தம் போடட்டும்!" என தெரிவித்துள்ளார். சிலம்பரசன்.TRன் இந்த பதிவால் ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர். அந்த பதிவு இதோ…

 

View this post on Instagram

A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)

நீண்ட காலமாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஸ்வீட் கொடுக்கும் ARரஹ்மான்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் பட ஸ்பெஷல் ட்ரீட்! விவரம் உள்ளே
சினிமா

நீண்ட காலமாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஸ்வீட் கொடுக்கும் ARரஹ்மான்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் பட ஸ்பெஷல் ட்ரீட்! விவரம் உள்ளே

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக்பாஸ் கவினின் சூப்பர் ஹிட் டாடா... கவனம் ஈர்க்கும் அசத்தலான வீடியோ இதோ!
சினிமா

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக்பாஸ் கவினின் சூப்பர் ஹிட் டாடா... கவனம் ஈர்க்கும் அசத்தலான வீடியோ இதோ!

அஜித் குமாரின் உத்வேகம்... அட்டகாசமான BMW பைக் வாங்கிய மஞ்சு வாரியரின் புதிய பயணத்திற்கு குவியும் வாழ்த்துகள்!
சினிமா

அஜித் குமாரின் உத்வேகம்... அட்டகாசமான BMW பைக் வாங்கிய மஞ்சு வாரியரின் புதிய பயணத்திற்கு குவியும் வாழ்த்துகள்!