"அவருக்கு பிடிச்சா மாதிரி என்னை மாத்திக்கிட்டேன்" - கவிஞர் சினேகன் - கன்னிகா தம்பதியினரின் Cute Interview இதோ..

கவிஞர் சினேகன் கன்னிகா தம்பதியினரின் சுவாரஸ்யமான நேர்காணல் இதோ - Lyricist snehan and kanniga couple viral cute interview | Galatta

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பிரபலங்களின் ஒருவர்  கவிஞர் சினேகன். திரைப்படங்களில் பாடல்கள் எழுதி ரசிகர்களின் பெரும் கவனத்தை ஈர்த்தவர் சினேகன். பலரும் ரசிக்கக் கூடிய பெரும்பாலான பாடல்களை எழுதியுள்ளார் பாடலாசிரியர் சினேகன். இவர் பாடல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இன்று வரை இருந்து வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலமான இயக்குனர் ராம், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோருக்கு பெரும்பாலான பாடல்களில் பணியாற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று தமிழகமெங்கும் பரவலாக அறியப்பட்டார். மேலும் உலகநாயகன் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி மாநில செயலாளராக தற்போது இருந்து வருகிறார். மேலும்  இவர் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலியான சின்னத்திரை நடிகையான கன்னிகாவை மணந்தார். இருவரது திருமணமும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களின் வாழ்த்துகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சினேகன் – கன்னிகா தம்பதியினர் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு தங்களது வாழ்கை மற்றும் காதல் கதையை பகிர்ந்து கொண்டனர். இதில் கன்னிகா "எனக்கும் அவருக்கும் புரிதல் அடிப்படையில் வித்யாசம் இருந்தது. அவர் எல்லா விஷயத்தையும் முதிர்ச்சியுடன் அனுகுவார். அறிவாளி. நான் அப்படி இல்லை. நான் குழந்தை மாதிரி.. விளையாட்டு தனமாகவே இருந்தேன். சில இடங்களில் எங்க எப்படி பேசனும்னு கூட எனக்கு தெரியாது. இவருடன் சில பெண்கள் அறிவுபூர்வமாக பேசுவார்கள். இவர் நம்ம கிட்ட அதிகமா சிரிச்சு பேசுறது இல்ல. ஆனா அவங்க கிட்ட சிரிச்சு பேசுகிறார் என்று எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கும்..அவங்க அறிவுபூர்வமா பேசுறதால தான் அவர் அப்படி சிரிச்சு பேசுறாரோ னு.‌ நானும் அறிவாளியா மாறனும்னு நினைச்சேன்.. அவருக்கு பிடிச்சா மாதிரி மாறனும்‌னு நினைச்சேன். அதுக்கப்புறம் அவர் சிலரிடம் பேசும் போது நானும் அந்த உரையாடலில் நுழைந்து ஏதாவது பேசுவேன். அது சொதப்பலில் போய் முடிந்து விடும்.." என்றார்.

மேலும் சினேகன் அதை தொடர்ந்து "சினேகனை சுற்றி தன்னுடைய காதல் இருக்கனும்னு நினைச்சு செய்யும் வேலை மட்டும்தான் அப்படி மற்றபடி அவர் ரொம்ப தெளிவு. புத்திசாலி. நிதானமாக முடிவு எடுப்பவர். இப்போது அவள் தெளிவாக இருப்பார். நான் குழந்தைதனமா மாறிட்டேன்" என்றார் சினேகன்.

மேலும் சினேகன் - கன்னிகா தம்பதியினர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான நிகழ்வுகள் கொண்ட முழு வீடியோ இதோ 

 

“Adjust பண்ணாமலா நீ முன்னணி நடிகை ஆகிருப்ப?” - விமர்சனத்திற்கு விளக்கமளித்த நடிகை சர்மிளா.. முழு வீடியோ இதோ
சினிமா

“Adjust பண்ணாமலா நீ முன்னணி நடிகை ஆகிருப்ப?” - விமர்சனத்திற்கு விளக்கமளித்த நடிகை சர்மிளா.. முழு வீடியோ இதோ

வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் நிலவரம் என்ன? - தயாரிப்பாளர் கொடுத்த Ground Report இதோ..
சினிமா

வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் நிலவரம் என்ன? - தயாரிப்பாளர் கொடுத்த Ground Report இதோ..

தனுஷின் நடிப்பு உங்களை Influence செய்ததா? செல்வராகவனின் சுவாரஸ்யமான பதில்.. - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

தனுஷின் நடிப்பு உங்களை Influence செய்ததா? செல்வராகவனின் சுவாரஸ்யமான பதில்.. - வைரலாகும் வீடியோ இதோ..