ஆஞ்சநேயருக்கு ஆதிபுருஷ் டிக்கெட்..! திரையரங்குகளில் இருக்கை காலியாக விட படக்குழு முடிவு – விவரம் உள்ளே..

அனுமானுக்கு காலி இருக்கை அறிவிப்பை வெளியிட்ட படக்குழு வைரல் பதிவு உள்ளே - Adipurush team announced Empty seat for hanuman details here | Galatta

இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தையடுத்து பிரபாஸ் அவர்களுக்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உருவாகி தற்போது அவர் பான் இந்திய ஸ்டார் உயரத்தில் இருந்து வருகிறார். தற்போது பிரபாஸ் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமான  கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார்.  அதையடுத்து Sci Fi திரைப்படமாக பக்கா ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக தெலுங்கு மற்றும் இந்தி என இரு மொழிகளில் பைளிங்குவலாக உருவாகி பான் இந்திய திரைப்பட அளவில் உருவாகி வரும் ‘புரோஜக்ட் கே’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே இந்தியா நாட்டின் இந்து இதிகாச கதையான இராமாயணத்தை தழுவி இயக்குனர் ஓம் ராவத் இயக்கி முடித்துள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ இதில் பிரபாஸ் ராமராக நடிக்கின்றார். இவருடன் இணைந்து சீதாவாக கீர்த்தி சனான், இராவண காதாபாத்திரத்தில் சைப் அலிகான் ஆகியோர் நடித்துள்ளார். இதுவரை இந்திய சினிமாவில் இல்லாத அளவு பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய , அபூர்வா மோட்டிவாளி சஹை மற்றும் ஆஷிஷ் மட்ரே இணைந்து படத்தொகுப்பு செய்துள்ளனர்.

Retrophiles தயாரிப்பில் உருவான இப்படம் வரும் ஜூன் மாதம் 16 ம் தேதி உலகமெங்கும் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம். மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தொடர் அப்டேட்டுகளினால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. மேலும் ஆதிபுருஷ் டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலே 6 கோடிக்கும் மேல் பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது. மேலும் படத்தின் இரண்டாவது டிரைலர் இன்று மாலை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

arya kathar basha muthuramalingam movie sneak peek released

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இருக்கை இந்து கடவுள் ஆஞ்சநேயருக்கு காலியாக விட போவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், “அர்பணிப்பு, பக்தி, விசுவாசம் இதற்கு முழு உருவமாக விளங்கும் அனுமனுக்கு மிகுந்த மரியாதையுடன் கூடிய பணிவான அஞ்சலி.” என்று குறிப்பிட்டு இந்த அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பு தற்போது ரசிகர்களால் அதிகம் வரவேற்கப் பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்களை இயக்கும் நாள் வரும் என நினைத்ததே இல்லை!- சூப்பர் ஸ்டார் பற்றி எமோஷனலான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... லால் சலாம் பட புது GLIMPSE இதோ!
சினிமா

உங்களை இயக்கும் நாள் வரும் என நினைத்ததே இல்லை!- சூப்பர் ஸ்டார் பற்றி எமோஷனலான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... லால் சலாம் பட புது GLIMPSE இதோ!

'இது ஒரு நிறக்குருடு!' வில்லன்களுக்கு CLASS எடுக்கும் யோகி பாபு... சித்தார்த்தின் டக்கர் பட கலகலப்பான SNEAK PEEK வீடியோ இதோ!
சினிமா

'இது ஒரு நிறக்குருடு!' வில்லன்களுக்கு CLASS எடுக்கும் யோகி பாபு... சித்தார்த்தின் டக்கர் பட கலகலப்பான SNEAK PEEK வீடியோ இதோ!

மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் திருமணம் குறித்து கேள்வி.. - மாஸ் ரிப்ளே கொடுத்த கீர்த்தி சுரேஷ் ..! – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் திருமணம் குறித்து கேள்வி.. - மாஸ் ரிப்ளே கொடுத்த கீர்த்தி சுரேஷ் ..! – வைரல் வீடியோ உள்ளே..